Kathal oviyan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Kathal oviyan |
இடம் | : Namakkal |
பிறந்த தேதி | : 02-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 235 |
புள்ளி | : 4 |
உலகோர் குலதெய்வம்
உன் கருவின் கதகதப்பில்
உயிர் கொண்டேன்
எனைப் படைத்த
கடவுள் நீ!
எனக்கு பாலூட்டி
சீராட்டி வளர்த்தாய்
என் தாய் நீ!
என்னோடு
மண்ணில் விளையாடி
அன்பை வளர்த்தாய்
என் சகோதரி நீ!
பதின் பருவ
ஹார்மோனால்
பட்டாம்பூச்சி பறந்த போது
எனக்கு தேவதை நீ!
கல்யாண பந்தத்தில்
வாழ்வோடு கைகோர்த்த
மனைவி நீ!
என் சகியின்
மணிவயிற்றில்
மலர்ந்து சிரித்த போது
எனக்கு தெய்வத் திருமகள் நீ!
சருமம் சருகாகி
உதிரும் இலையான
எனை மடியில் சுமக்கும் போது
மீண்டும் தாயே நீ!
மானுட தேர் ஓட
மறுக்க முடியாத
மலர்ந்த சக்தியே
அச்சாணியே....
மாகாளி நீ!
பராசக்தி நீ!
கண்ணீரோடு என் கடைசி கிறுக்கல் கவிதை...!!!
என்றாவது நீ என்னை புரிந்துகொள்வாய் என்று..
ஏக்கபட்டு பொறுத்து போன என் இதயம்...
என்றோ வேண்டாம் என நீ தூக்கி எறிந்த
வேகத்தில் வெறுத்து போய் வருத்தத்தில்
தேடுகிறது வாழ்க்கையின் முடிவை....!!!
உன்னை பார்க்காமலும் உன்னிடம் பேசாமலும்...
இருக்க தெரிந்த எனக்கு...
ஏனோ, உன்னை நினைக்காமல்
மட்டும் இருக்க தெரியவில்லை...
இருக்க முடியவில்லை என்பதே பொருந்தும் அதுவே உண்மை...!!!
ஒவ்வொரு மனிதனையும்,
நாணயத்தின் இரு பக்கங்கள் போல...
உண்மையும் பொய்யும் சூழ்ந்திருக்கும்...!
என்னை சூழ்ந்து கொண்ட பொய் அதில்
துளியளவும் நீ இல்லை...!
இதயம் திருடிக்கொண்ட காதல்
அத
உனக்காக நான் அழுதேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
என்றெல்லாம் பொய் பேச மாட்டேன்.
என்னை அழ வைத்தது என் காதல்,
நான் அழுதது என் காதலுக்காக
என்னை ஏமாற விட்டது நான்.
என் விருப்பத்துடன் தான் காதலித்தேன்
என்னை நானே காயப்படுத்தினேன்.
அனைத்தும் என் விருப்பத்துடன் தான்
ஆனால் நீ ஆசைப்படும் பிரிவு மட்டும்
என் விருப்பமின்றி..
நீ கிடைக்கவில்ல என்றால்
கண்ணீருடன் இருக்க போவதில்லை
காதலுடன் தான் இருப்பேன்
உன்னை நேசித்தும் நெருங்க முடியாமல்
நீ விளையாட்டாகவோ வேடிக்கையாகவோ என்
காதலை
அளக்கிறாய் போலும் .. கவனமடா கடைசியில்
அழுதுவிட போகிறாய்
உண்மை அன்பு வேறு எங்குமே இல்லாமல்....
நண்பர்கள் (5)

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி

ARUN KUMAR B.
திருச்செங்கோடு,நாமக்கல்.

முல்லை
மலேசியா

நா கூர் கவி
தமிழ் நாடு
