Kathal kavithai
கண்ணீரோடு என் கடைசி கிறுக்கல் கவிதை...!!!
என்றாவது நீ என்னை புரிந்துகொள்வாய் என்று..
ஏக்கபட்டு பொறுத்து போன என் இதயம்...
என்றோ வேண்டாம் என நீ தூக்கி எறிந்த
வேகத்தில் வெறுத்து போய் வருத்தத்தில்
தேடுகிறது வாழ்க்கையின் முடிவை....!!!
உன்னை பார்க்காமலும் உன்னிடம் பேசாமலும்...
இருக்க தெரிந்த எனக்கு...
ஏனோ, உன்னை நினைக்காமல்
மட்டும் இருக்க தெரியவில்லை...
இருக்க முடியவில்லை என்பதே பொருந்தும் அதுவே உண்மை...!!!
ஒவ்வொரு மனிதனையும்,
நாணயத்தின் இரு பக்கங்கள் போல...
உண்மையும் பொய்யும் சூழ்ந்திருக்கும்...!
என்னை சூழ்ந்து கொண்ட பொய் அதில்
துளியளவும் நீ இல்லை...!
இதயம் திருடிக்கொண்ட காதல்
அதில் உன்னை தவிர வேறு எவனும் இல்லை...!
உண்மையில் உன்னை தவிர வேறு எவனுமே இல்லை...!
கலங்கிய கண்களும் உன் குழம்பிய சிந்தனையும் ...
என்னால் உடைத்திட முடியாத உன் மௌனமும்...
எதிர்பாரத உன் முடிவையும்...
ஏற்றுக்கொள்ள முடியாத இந்த பிரிவையும்....
தாங்கிக்கொள்ளும் வலிமை என்னிடம் இல்லை...!
காரணம்...
உன்னை கண்ட நாள் முதல், சின்ன சின்னதாய்
ஆசை வளர்க்க தொடங்கி ஓர் எல்லை இல்லாமல்
உன்னை தவிர வேறு எண்ணமில்லாமல்
உனக்கும் கூட தெரியாமல்
உன்னோடு தான் நிழல் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...!
உன் தவறான புரிந்துணர்விற்கு உட்பட்டு
ஏன் என்னை வெறுக்க முடிவெடுத்தாய்...???
வலிக்குதடா...
ரொம்ப ரொம்ப கொடுமையா வலிக்குது...
வெறுத்து போகதே உயிரே...
என்னை விட்டு போகதே..!
உயிரோடு என்னை விட்டு விட்டு போகதே...!
வலிமை இழந்த என் இதயத்தால் இன்னொருத்தியோடுஇணைத்து
நீ எங்கிருந்தலும் வாழ்க என உன்னை வாழ்த்த முடியாது...!
நீ இல்லாத ஒரு வாழ்க்கை இனிமேல் வாழவும் முடியாது... கற்பனையில் கூட...!!!!
மன்னித்துக்கொள்... !
உன்னினைவுகளோடு ஒரு தற்கொலை....!
கண்ணீரோடு கடைசி கிறுக்கல் கவிதை...!
எல்லாத்தையும் விட அதிகமா உன்ன தான் நேசிக்கிறேன், காதலிக்கிறன்டா...!
என்னால வேற யார்கூடவும் வாழமுடியாது அந்த மாதிரி யோசிக்க கூட முடியல...!! உன்னோட நினைவுக்காக முடிஞ்ச வரைக்கும் உயிர் வாழ முயற்சி பண்றேன்...! என்னை மீறி எதாவது நடந்தா.. என்ன மன்னிச்சிடு...!!! மறந்துடாதடா...!!!