மார்ச் 8

கற்பழித்துக் கொல்லப்பட்ட
இளம்பெண்ணின்
உடல்காயங்களை
உற்று நோக்கியதுண்டா?
பாலியல் பலாத்காரத்தால்
இறந்து போன சிறுமியின்
இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொண்டதுண்டா?
திருமணத்தைக் காணாத
முதிர்கன்னியின்
முக'வரி'களின்
அர்த்தம் படித்ததுண்டா?
விவாகரத்து கூட தராமல்
வெட்டிவிடப்பட்ட அபலைகள்
அனுபவிக்கும் தனிமையின்
கொடுமையை சிந்தித்ததுண்டா?
மாமியார்களால் கொளுத்தப்பட்ட
மருமகள்களின் கருகிய
உடலின் சூட்டை விரலால்
தொட்டுணர் ந்ததுண்டா?
காமுகர்களால் தூண்டிலிடப்படும்
இளம் விதவையின்
இதய அறைக்குள்
என்றாவது எட்டிப்பார்ததுண்டா?
பெண்கள்தான் பெண்களுக்கு
முதல் எதிரியென எழுதும் ஒரு
பெண்படைப்பாளியின் எழுதுகோலின்
கொதிநிலையை எந்த மானி கொண்டாவது அளவிடமுடியுமா?
மகளிர்தினம் கொண்டாட......