மகளிர் தின வாழ்த்துக்கள்
வெளிச்சத்தின் விட்டில்கள்அல்ல பெண்கள்
வீர நெருப்புக்களை ஈன்ரெடுத்த எரிமலைக் குழம்புகல் - வீர விடுதலைக்காய் உதிரத்தை உரமாக்கியவர்கள்!. சரித்திரத்தின் சான்றுகள் !
கயவர்களால் கருவரை கல்லரையானாலும்
வீர மறவர்களை மடியில் தாங்கிய மாதாக்கள்
போரிலே மறவன் பசியால் மடியாமல் இருக்க
தன் முலைப் பாலை புகட்டி போருக்கு அனுப்பிய
வீரத் திலகங்கள் ..! விடுதலை வெளிச்சங்கள் ..!
சமுதாயத்தின் எச்சங்கள் அல்ல பெண்கள்
உணர்ச்சியின் உச்சங்கள் - வீரத்தின் மிச்சங்கள்!.
விடுதலை மண்ணிலே வித்திட்டவர்கள் ...!
சமுதாயமே ...! சமுதாயமே ..! -இவர்களை
விளம்பர பொருளாக்கி வீதியில் நசுக்கியது போதும் ..! - காமப் பொருளாக்கி கசக்கி முகர்ந்தது போதும் ..! - பெண் என்பவள் போதையும் அல்ல
அவள் பேதையும் அல்ல - இந்த சமுதாய
விடியலுக்கு வெளிச்சம் தரும் திரு விளக்கு ...!