பெ அரங்கசாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பெ அரங்கசாமி |
இடம் | : மேடவாக்கம் |
பிறந்த தேதி | : 02-Jun-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 24 |
நான் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழத்தில் பணிபுரிகிறேன்- இது வரையில் இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிட்டு உள்ளேன். முதல் புத்தகம் இலட்சியப் பூக்கள், இரண்டாவது புத்தகம் மனித நேயப்பூக்கள் - இப்புத்தகத்திற்கு மேதகு முன்னால் இந்திய ஜனாதிபதி ஆ ப ஜே அப்துல் கலாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். தாய்லாந்து, ஹாங்ஹாங்,சீனா மற்றும் இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு சென்று வந்த பயணங்களை தொகுத்து ஒரு கவிஞனின் தென்கிழக்காசியப் பயணம் என்ற பயணக்கட்டுரை எழுதியுள்ளேன். விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது,
தேசம் இது தேசம் - இது
எங்களது தேசம்
தன்மானம் இழந்திடாத
தமிழனது தேசம்
போர்பலவே நடத்திச் சென்று
புவியளந்த தேசம்
பேர் போர்ட்டும் மனிதர்களை
பெற்றெடுத்த தேசம்
வந்தாரை வாழவைக்கும்
வண்ணத்தமிழ் தேசம்
எந்த மொழி பேசினாலும்
ஏற்ட்டுக்கொள்ளும் தேசம்
தேசம் இது தேசம் - இது
எங்களது தேசம்
தன்மானம் இழந்திடாத
தமிழனது தேசம்
போர்பலவே நடத்திச் சென்று
புவியளந்த தேசம்
பேர் போர்ட்டும் மனிதர்களை
பெற்றெடுத்த தேசம்
வந்தாரை வாழவைக்கும்
வண்ணத்தமிழ் தேசம்
எந்த மொழி பேசினாலும்
ஏற்ட்டுக்கொள்ளும் தேசம்
அரை குறை
ஆடையில்
ஆபாசமாய் நடிக்க வைத்து
அந்தரங்கத்தை
அரங்கிலேற்றி
சமுதாயத்தை
அவலத்தில் நிறுத்தும்
திரைப்பட துரையின்
அவலம் ஒரு புறம் ..
குப்பையை
இங்கு போடவும் என்ற
வாசகத்தை
குப்பையில் போட்டு
குப்பையை
கோபுரமாய் கொட்டும்
படித்த மக்கள் ஒரு புறம் ..
சுவையான கல்வியை
சுமையாக்கி
சுலபமாய் பணம் தீட்டும்
கல்வி நிறுவனங்களின்
வர்த்தகம் ஒரு புறம் ...
பணம் ஈட்டுவதற்கு
படிப்பு அவசியமில்லை
பாசாங்கும்
பப்ளிசிடியும் தான் அவசியம் என
புற்றீசல் போல்
பாப்புலராகி கொண்டு இருக்கும்
போலி சாமியார்களின் ஆதிக்கம் ஒரு புறம்..
ஆடையில் தான் வெண்மை தேவை
அகத்தில் அ
மகனே ,
உயில் எழுத
பணமில்லை ....
உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்
சடலத்தை
சங்கு ஊதி
மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க
சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க
செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை
சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்
மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது
உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !
சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !
தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .
வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு
இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி
பரிணாம வளர்ச்சியின்
தாகத்தை தணிக்க வந்த
தங்க ரதமே !
உன்னை துறந்த வாழ்க்கையில்
மனிதர்கள் ஒரு நடை பிணம் !
இரண்டும் இரண்டும்
எவ்வளவு என்பதை
அறியவும் நீயே !
இருபதாயிரம் மைல்களுக்கு
அப்பால் இருப்பவர்களை
இணைப்பவனும் நீயே !
இன்னிசை பாடல்களை
இன்பமாய் ரசிக்கவும் நீயே !
இனிய குழந்தைகளுக்கு
விளையாட்டு மைதானமும் நீயே !
எலியை வாகனமாய் கொண்டு
எளியவர்களையும்
வல்லவர்கள் ஆக்குபவனும் நீயே !
தகவல்களை
தரமாய் தருபவனும் நீயே !
காதலர்களுக்கு
தூது விடும் புறாவும் நீயே
வர்த்தகர்களுக்கு
வருமானம் அளிப்பவனும் நீயே !
ஆதியும் நீயே !
அந்தமும் நீயே!
போற்றி ப
பருவம் தவறாத மழை வேண்டும்
பசுமை மாறாத நிலம் வேண்டும்
பறந்து பாயும் நதி வேண்டும்
பாரதம் வானில் சிறக்க வேண்டும்
குருதி சிந்தா போர்கள் வேண்டும்
குன்றின் விளக்காய் மனங்கள் வேண்டும்
பெருகி பல்கும் அன்பு வேண்டும்
பாரெங்கும் சகோதர ஒற்றுமை வேண்டும்
மனித நேயம் மலர்ந்திட வேண்டும்
மதச் சண்டைகள் மறைந்திட வேண்டும்
புனித பயணமாய் வாழ்க்கை வேண்டும்
புத்தன் கண்ட நல் பூமி வேண்டும்
பிணி நீங்கிய வாழ்வு வேண்டும்
பொல்லா தீமைகள் பொசுங்கிட வேண்டும்
அணு ஆயுதம் இல்லா உலகு வேண்டும்
அமைதி எங்கும் நிலவிட வேண்டும்.
பெல்நகர் பெ.அரங்கசாமி
கொட்டும் போதுதான்
அருவிக்கு பெருமை
குவியும் போதுதான்
கரங்களுக்கு பெருமை
சூடும் போதுதான்
மலருக்குப் பெருமை
விடியும் போதுதான்
கதிருக்குப் பெருமை
பொழியும் போதுதான்
மழைக்குப் பெருமை
வழியும் போதுதான்
நதிக்குப் பெருமை
எரியும் போதுதான்
தீ. . . க்குப் பெருமை
கொடுக்கும் போதுதான்
மனிதனுக்குப் பெருமை
பெல்நகர் பெ.அரங்கசாமி
எழுதாத கவிதைகள்
எத்தனையோ பலகோடி
அழுதாலும் தீராது
அத்தனையும் வறுமையடி
உழுதலும் கிடைக்கவில்லை
உண்மையான இன்பமடி
பழுதுபட்டு போனதுதான்
பாழுமிந்த உள்ளமடி
அழுது விட்டமனம்
அழித்துக்கொள்ள போனதடி
விழுது விட்டமரம்
வேரறுந்து போனதடி
ஊழலும் கூட இன்று
உயர்ந்த மலை ஆனதடி
நிழலும் கூட வென்று
நிஜமாகி போனதடி . . . .
பெல்நகர் பெ.அரங்கசாமி