கணினி
பரிணாம வளர்ச்சியின்
தாகத்தை தணிக்க வந்த
தங்க ரதமே !
உன்னை துறந்த வாழ்க்கையில்
மனிதர்கள் ஒரு நடை பிணம் !
இரண்டும் இரண்டும்
எவ்வளவு என்பதை
அறியவும் நீயே !
இருபதாயிரம் மைல்களுக்கு
அப்பால் இருப்பவர்களை
இணைப்பவனும் நீயே !
இன்னிசை பாடல்களை
இன்பமாய் ரசிக்கவும் நீயே !
இனிய குழந்தைகளுக்கு
விளையாட்டு மைதானமும் நீயே !
எலியை வாகனமாய் கொண்டு
எளியவர்களையும்
வல்லவர்கள் ஆக்குபவனும் நீயே !
தகவல்களை
தரமாய் தருபவனும் நீயே !
காதலர்களுக்கு
தூது விடும் புறாவும் நீயே
வர்த்தகர்களுக்கு
வருமானம் அளிப்பவனும் நீயே !
ஆதியும் நீயே !
அந்தமும் நீயே!
போற்றி போற்றி!
கணினி போற்றி !
மூலவா போற்றி!
கேசவா போற்றி !
******************************************************************
கணினியை போற்றும் மனிதர்களுக்கு
கணினியை வணங்குவதற்கு முன் சிறிய ஆலோசனைகள் : :
1. நான் அனுப்பும் கதிர்வீச்சின் பாதிப்பை
தவிர்க்க
20 நிமிடத்திற்கு மேல் என் அருகில் இருக்காதீர்கள் .
2. கண்களை அவ்வபோது சிமிட்டுங்கள் இல்லையேல் கண்கள் ஈர பசை அற்று போய் விடும்
3. உட்காரும் விதத்தை உணர்ந்து உட்காருங்கள்
முதுகு வலி, கழுத்து வலிகள் உங்களுக்கு இனாமாக வந்து சேரும்.
4. தொலை தூரத்தில் உள்ள பொருட்களையும் அவ்வபோது பாருங்கள் .
5.உயிர் மரித்த ஒரு மனிதன் பழக்க தோஷத்தில்
எலும்பு கூடோடு எழுந்து வந்து என்னை இயக்க வந்து விட்டான் . (தலைப்பில் உள்ள படம் )
6. ஏன்னை ஆளாதீர்கள்
அனுபவியுங்கள்
வாழ்க்கையையும் வாழுங்கள் ..
நீங்களும் போற்ற படுவீர்கள் என்னை போன்றே