உலக மின் சேமிப்பு தினம்
இருளை போக்கத் தீ பந்தம் கண்டோம் !
பந்தம் தவிர்க்க அரிக்கென் விளக்கு கண்டோம் !
அரிக்கென் தவிர்க்க மின்னொளி கண்டோம் !
மின்னொளி இல்லா வாழ்வை
கனவில் கூட கண்டிட வெறுத்தோம்!!
இன்றோ...
மின்சாரச் சிக்கனம்
இக்கணம் அவசியமாய் !
மின்சாரம் கூட அரசியலாய்
பல மாற்றம் கண்டது !!
அனல் மின்சாரம் வருமென்று
காற்றலையை சுழல விட்டும்
நீர்மின்சாரம் பழுதாக
நிலக்கரியை எரித்தோம் !!
பகலில் தொலைந்தால்
தொழிலுக்கு உதாவாது !
இரவில் தொலைந்தால்
தூக்கத்திற்க்காகாது !
உயிருடன் கலந்துவிட்டாய்
இன்னொரு பிறவியான மின்சாரமே!
வரும் சந்ததிக்கும் வேண்டுமென்று
கொண்டாடுகிறோம் ஒரு தினமே !!
உலக மின்சார தினமே !!