புத்தன் கண்ட பூமி வேண்டும்
பருவம் தவறாத மழை வேண்டும் 
பசுமை மாறாத நிலம் வேண்டும் 
பறந்து பாயும் நதி வேண்டும் 
பாரதம் வானில் சிறக்க வேண்டும் 
குருதி சிந்தா போர்கள் வேண்டும் 
குன்றின் விளக்காய் மனங்கள் வேண்டும் 
பெருகி பல்கும் அன்பு வேண்டும் 
பாரெங்கும் சகோதர  ஒற்றுமை வேண்டும் 
மனித நேயம் மலர்ந்திட வேண்டும் 
மதச் சண்டைகள் மறைந்திட வேண்டும் 
புனித பயணமாய் வாழ்க்கை வேண்டும் 
புத்தன் கண்ட நல் பூமி வேண்டும் 
பிணி நீங்கிய வாழ்வு வேண்டும் 
பொல்லா தீமைகள் பொசுங்கிட வேண்டும் 
அணு ஆயுதம் இல்லா உலகு வேண்டும் 
அமைதி எங்கும் நிலவிட வேண்டும்.
பெல்நகர் பெ.அரங்கசாமி
 
                    

 
                             
                            