அவலங்கள்

அரை குறை
ஆடையில்
ஆபாசமாய் நடிக்க வைத்து
அந்தரங்கத்தை
அரங்கிலேற்றி
சமுதாயத்தை
அவலத்தில் நிறுத்தும்
திரைப்பட துரையின்
அவலம் ஒரு புறம் ..

குப்பையை
இங்கு போடவும் என்ற
வாசகத்தை
குப்பையில் போட்டு
குப்பையை
கோபுரமாய் கொட்டும்
படித்த மக்கள் ஒரு புறம் ..

சுவையான கல்வியை
சுமையாக்கி
சுலபமாய் பணம் தீட்டும்
கல்வி நிறுவனங்களின்
வர்த்தகம் ஒரு புறம் ...

பணம் ஈட்டுவதற்கு
படிப்பு அவசியமில்லை
பாசாங்கும்
பப்ளிசிடியும் தான் அவசியம் என
புற்றீசல் போல்
பாப்புலராகி கொண்டு இருக்கும்
போலி சாமியார்களின் ஆதிக்கம் ஒரு புறம்..

ஆடையில் தான் வெண்மை தேவை
அகத்தில் அல்ல என
அணைத்து தேர்தல்களிலும்
அம்சமாய் பிரச்சாரம் செய்து வாக்கை
அள்ளி தொலை தூரத்தில் காணமல் போகும்
அரசியல்வாதிகள் ஒரு புறம் ...

மானம் எங்களுக்கு பிரதானமல்ல
வருமானம் தான் பிரதானம் என
வரும் வாய்ப்பினை
வளமாய் பயன்படுத்தும்
வாகன உரிமை அளிக்கும்
அலுவலகங்களின் வர்த்தகம் ஒரு புறம்

வேலை வாங்கி கொடுப்பது தான் எங்கள்
வேலை என உரைத்து
வேண்டிய பணத்தை
வேகமாய் மக்களிடம் கறந்து
வேடமிட்டு
வேறு நாடு சென்று
பதுங்கும் கூட்டம் ஒரு புறம்

அனுபவ அறிவால்
அம்சமாய் திட்டமிட்டு
வங்கிகளையும்
நகை கடைகளையும்
நாசூக்காய் சூறையாடி
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணமாய் வளரும்
நவநாகரீக கள்வர்களின்
கூட்டம் ஒரு புறம் ..

பணம் பணம் பணம் என்ற
மாரத்தான் ஓட்டத்தில்
பட்டம் போல் பறக்க நினைத்து
மனித நேயத்தை தொலைத்து
சமுதாயத்தை தூக்கில் ஏற்றி

இறைவனால் அளிக்கப்பட
முடிவு நிர்ணயிக்கப்பட்ட
வாழ்க்கையை
முழுமையாய் வாழாமல்
மன சாந்தியற்று

ஆன்மாக்கள் சிதைந்து
கொண்டு இருக்கும் நிலை தான்

இன்றைய சமூகத்தின் அவலங்கள் .....

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (18-Apr-14, 8:45 am)
Tanglish : avalangal
பார்வை : 131

மேலே