மயக்கம்

ஒவ்வொரு
விடியலும் எனக்காகவே
புலர்கிறது......
ஒவ்வொரு
நாலும் எனக்காகவே
நகர்கிறது....
ஒவ்வொரு
இரவுகளும் கழிந்தது கனவுகளாய்....
கற்பனையில் வாழ்க்கை
சுகமாகவே இருக்கிறது....
நிஜத்தினை தேடும் ஆராய்ச்சியில்
இலயித்திருக்கிறது மனம்...
எதையெதையோ தொலைத்திருக்கிறேன்!!!!
எதுவும் என்னதில்லை...
அதனால் வருதப்படாமலில்லை!!!
இன்னும் தேடுகிறேன்...
தொலைத்ததையில்லை
கிடைக்காததை.!!!
தேடும்வழியில்
ஏதேதோ கிடைத்தது...
எதுவும் திருப்தியாயில்லை..
இன்னும் தெரியவில்லை
எதை தேடுகிறேனென்று....

எழுதியவர் : (18-Apr-14, 8:09 am)
சேர்த்தது : கருப்பசாமி
Tanglish : mayakkam
பார்வை : 53

மேலே