ஆரூடமல்ல
வருங்கால சந்ததியின்
வாழ்க்கைப் பெரும் போராட்டம்
வன விலங்கு நாடெங்கும்
வலம்வரும் அது பெரும் மார்ட்டம்
ஒரு சிலரின் உடமைஎன
ஆகிவிடும் நிலங்களெல்லாம் - அதனால்
வருமைதனை எதிர்காலம்
வாசலிலே கோலமிடும்
நிலம் எங்கும் வீடாக
குளம் எல்லாம் மேடாக
தளம் போட்ட வீடுகளஆய்
தரையெங்கும் நிரம்பிருக்கும்
உயிர்வாழ்க்கை என்பதே
பெரும்பாடாய் ஆகிவிடும்
வாயிறொன்று இருப்பதே
வீணென தோன்றிவிடும்
பயிரில்லா பூமியெங்கும்
பாலைவனம் ஆகிவிடும்
சுயநலமும் பெருகிவிடும்
சுர்டமெல்லாம் ஓடிவிடும்
நீருக்காய் அலைவது போய்
சொருக்காக அலைகின்ற
பேருவந்து சேரும் பார்
பெரும் போரால் பூமி மாரும்பார்
ஆரூடம் இதுவல்ல
அத்தனையும் உண்மையென்று
வருங்காலத் தலைமுறைகள்
விழியுயர்த்தி விளித்து நிற்கும்.
பெல்நகர் பெ. அரங்கசாமி