மரம்

மரம்...
மனிதர்களின் வாரிசு
மண்ணுக்கு சேவகன்
காற்று கடக்கும் சாலை
பறவைகளின் பள்ளிக்கூடம்
வானம்பார்த்து புன்னைக்கும் கன்னி
மேகவரம் வரும் தடம்
இயற்கையின் இனிய நாக்கு
காற்றுத் துறைமுகம்
கடவுள்களின் கூடாரம்
நிழல்களுக்கெல்லாம் தாய்
சூரியனை இயக்கும் பச்சைக் கொடி

மரம் போல் நிற்கும் மனிதா..!
மரத்தின் மனமாகு... கொடுக்க
பல்லுக்கு குச்சி
பசிக்கு கனி
வெயிலுக்கு இலை
வேர்வைக்கு காற்று
வேலிக்கு வேர்
உஞ்சலுக்கு கிளை
உறங்க கட்டில்
சுவாசிக்க வாயு
சேமிக்க நலம்

கரங்களை வெட்டினாலும்
தழைக்கும்
காயம் பல கொடுத்தாலும்
உயிர்க்கும்
முறித்து போட்டாலும்
நன்றி சொல்லும்
எத்தனை முறை
கொலை செய்தாலும்
அத்தனை முறையும்
மறு பிறப்பெடுக்கும்
எறிந்தால் விறகாகும்
எரித்தால் கரியாகும்

எறிந்த உன்னை
எந்த மரமும் - இதுவரை
எறிந்ததில்லையே..!
ஓ..மனிதா உனக்கும்
மன்னிக்க கற்று தந்தது
மரங்கள்தானோ..!
அழுகாத குணம்
மரங்களுக்கு உண்டு
மனிதா..
உனக்கு உண்டா..?

மரங்களின் மரணத்திற்கு
மனதால் இதுவரை-எந்த
மனிதரும் அழுததில்லையே..!

மரணித்த உன்னை
மடியில் தாங்கி
ஆறடி ஆழத்திலும்
அழுது கொண்டல்லவா இருக்கிறது..!
சவப்பெட்டியாய் மரம்..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (29-Dec-18, 8:30 pm)
Tanglish : maram
பார்வை : 644

மேலே