7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில்...
7 வது உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு சென்னையில் பிரமாண்டமாக 3 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாட்டிலிருந்தும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைத்து தமிழ் அமைப்புகளின் ஆதரவோடும் இந்த மாநாட்டை திரைப்பட பாடலாசிரியர் சினேகன் அவர்களும் , உலகத் தமிழ் சங்கத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்களும் முன்னெடுக்கிறார்கள். மாநாடு சிறப்புற அமைய தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் இம் மாநாட்டிற்கான பணிகளைச் செய்து வருகிறது. இம் மாநாட்டில் வெளியிடவிருக்கும் நூலில் இணைவது மட்டுமின்றி மூன்று நாள் விழாவிலும் கலந்து கொண்டு மேடைக் கவியரங்கிலும் பங்கேற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.
இம் மாநாடு கவிஞர்களுக்கு சிறப்பு மிக்க விழாவாக அமையும் என்பது உறுதி. ஆகவே நல் வாய்ப்பினை கவிஞர்கள் பயன்படுத்தி தங்களுக்கான அடையாளத்தைப் பதிவு செய்யவேண்டுமென கவியன்போடு கேட்டுக் கொள்கிறோம்இம் மாநாட்டை இணைந்து சிறப்பிக்க இலக்கிய அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு : 9551547027 செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன் அவர்கள்