எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர்களுக்கு அழைப்பு : வணக்கம் : 402 கவிஞர்களும்...

    கவிஞர்களுக்கு அழைப்பு :   வணக்கம் : 402 கவிஞர்களும் ஆசிரியர்களாக இணைந்து "கவிவிசை" என்ற மின்னூலினை அழகிய வண்ணத்தில் இலவசமாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.   இதன் அடுத்த முயற்சியாக, சம காலத்தில் வாழும் கவிஞர்களையும்; அவர்களது கவி நயமான படைப்பையும் வெளிக்கொணரும் வகையில் "கவி நானூறு" என்ற கவிதை நூலினை சனவரி 2023-ல் நடைபெறவிருக்கும் 46 வது சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிட கீதம் பதிப்பகம் முன் வந்துள்ளது. ஆகவே கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற தாங்களும் இந்த நூலில் ஒரு ஆசிரியராக இணைந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.   24 வரிகளுக்குள் சமூகம், இயற்கை, தன்னம்பிக்கை சார்ந்த கவிதைகளில் ஏதேனும் ஒன்றை தாங்கள் விரும்பும் தலைப்பில் யுனிகோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து –cpsivarasan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9445473609 என்ற பகிரிக்கு, பெயர்    , முகவரி , அலைபேசி(வாட்ஸ் அப்) , ஆதார் நகல் ஒன்றையும்  31-10-2022- க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  சங்க கால புற நானூறு நூலில் சங்க கால தமிழ் புலவர்களது பாடல்கள் 400 இடம்பெற்றுள்ளதைப் போல, சம காலத்தில் வாழும் 400 கவிஞர்களது கவிதைகளின் தொகுப்பாக இது வெளிவர உள்ளது என்பது இந்த நூலின் சிறப்பு. ஆகவே வரலாற்று சிறப்புமிகு நூலில் தாங்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும் என கவியன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த நூலில் இணையும் ஒவ்வொருவரும் இந்த நூலில் ஆசிரியரே... ஆகவே சென்னைப் புத்தகக்காட்சி மேடையில் வெளியிடும் போது தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். சென்னை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலினை, எத்தனைப் பிரதிகள் வேண்டுமானாலும் பணம் கொடுத்து தாங்கள் பெற்றுக் கொள்ளலாம். நன்றி   கவிஞர் செ.பா.சிவராசன் 9445473609 cpsivarasan@gmail.com         

நாள் : 27-Sep-22, 9:56 pm

மேலே