விவசாய மே --- முஹம்மத் ஸர்பான்

உழைப்பாளர் தினக் கவிதை. அணைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்எல்லோரும் யதார்த்தங்கள் மூலம் உழவனை பாடுவார்கள். நான் உழவன் மூலம் யதார்த்தங்களை இன்றைய நாளில் தேடிப் போகிறேன்.மூங்கில் நந்தவனமே
என்னை வாசியுங்கள்
புல்லாங் குழல்களால்
சிலுவைகள் தாங்கள்!
காற்றின் விலாசத்தில்
கலைந்து போன கனவு

குருவிகளின் கூட்டில்
கைகளைக் கட்டி நிற்க
உழைப்பாளி வாழ்வில்
வெளிச்சம் கிடையாது
எதிர்த்தவன் உடம்பில்
மூச்சின் ஓசை கேளாது

மனிதன் என்ற பெயரில்
பாலை போல மனிதம்
ஏழையின் தட்டைக்கூட
திருடிப் பார்க்க திட்டம்
கோழை போல நியாயம்
பாடைகள் சுமந்து போக
சிந்தும் விழிநீர்த்துளிகள்
பாவம் எதைச் செய்யும்

பூக்களின் தேன் துளியை
கோர வண்டுகள் திருடும்
முட் செடியின் நுனியில்
துப்பாக்கிகள் வெடிக்கும்
பசுமை நிலத்தை கொன்று
அதன் மேல் மாளிகைகள்
உழவன் நிலையை கண்டு
கறையான் கூட துடிக்கும்

நெற் கதிரின் கயிறுகளில்
உழவனின் தூக்கு மேடை
தூவும் முகில் மழலைகள்
அதன் மேலே அஞ்சலிகள்

நகங்களை உரசிப் பார்த்து
விரல்கள் தீக்குள் மூழ்கும்
இமைகளை அலசி வரும்
துன்பம் பசியில் நடமாடும்
காய்ந்த நதிகளைத் தேடி
எறும்புகள் கூட்டம் வரும்
கரும்பின் சக்கைகள் கூட
நாளை இரத்தங்கள் தரும்
ஆபாச உலகின் கண்களில்
இன்று சிரிக்கும் வயல்கள்
கேடு கெட்ட தனம் மூலம்
நாளை உறங்கும் சுடுகாடு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-May-18, 9:38 am)
Tanglish : vivasaaya maay
பார்வை : 466

மேலே