உழைப்பாளி

உழைக்கின்றோம்
சளைக்காது வாழ
உழைப்பின் மேன்மை
உழைப்பாளியின் வியர்வை
உணர முடியவில்லையே நம்மால்

உழைப்பாளிக்கு ஒரு தினம்
உணரத்தானே குறித்து வைத்தான்
ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பதற்கு அல்ல
உணர்ந்து வாழ்ந்தால்
உழைப்பாளியும் உண்டு உழைப்பும் உண்டு
உழைப்புக்கு மட்டுமே உண்டு
உயிர்களின் மதிப்பும் மாண்பு ம்

உலகம் போற்றும் உழைப்பின் தினம்
இன்று இத்தினம்
எத்தினத்திலும் உயர்ந்த தினம்
நம்மையும் காத்து நாட்டையும் காப்பவன்
எவனோ/ அவனே உழைப்பாளி
உழைக்கும் கரங்களில் நாமெல்லாம்
கொண்டாடுவோம் உழைப்பாளியை
வாழ்க வளர்க உழைப்பாளியும் உழைப்பும் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (1-May-18, 11:21 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : uzhaippaali
பார்வை : 128

மேலே