உழைப்போர் தினம் இன்று

இன்று பார்த்தோமானால்
பரவலாக உலகம் முழுவதும்
உழைப்பாளிகளாம் பாட்டாளிகள்
கோடான கோடி , ஆனால் இவர்கள்
உழைப்பின் பலன் அனுபவித்து
சுவைத்து இன்பத்தின் உச்சக்கட்டத்தில்
வாழ்ந்துவருவோர் எண்ணிக்கை
சில நூறோ இல்லை இன்னும் குறைவோ
இவர்கள் இன்றைய வலியோர் உலகை
ஆளப்பிறந்த சூத்திரக்காரர்கள் -இவர்கள்
நினைத்தால் ஒரு அரசாங்கத்தையே
கவிழ்க்கமுடியும் ..........இவர்கள் உழைப்பு
உழைப்பாளியின் உழைப்பின் பலனை
அனுபவித்து, அதையே பெருகும் தங்கள்
சாம்ராஜ்யமாக நிலை நிறுத்தி வாழும்
சாதுரிய புலிகள், புதுயுக சாணக்கியர்கள்
இவர்கள், ஆனால் இவர்கள் சாம்ராஜ்யத்து
அடிக்கால்கள் உழைப்பாளிகள் பாவம்
முன்னேற்றப் பாதையில் அதே இடத்தில்
இது என்ன விதியின் நியதியா இல்லை
'இந்த சிலர் வகுத்த 'புதுயுக நீதியா'
இறைவா நீயே பதில் சொல்லையா .

இன்றைய உழைப்போர் நாளில்
இந்த கேள்வியை நான் வைக்கிறேன்
தொழிலாளர் சார்பில் ............
உயர்வர்கத்தினர் கவனத்திற்கு
நியாயம் கோரி காந்திய வழியில்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-May-18, 11:27 am)
பார்வை : 64

மேலே