மே 1 , தொழிலாளர் தினம்

மண்ணை உழுகிறான்
பாத்தி கட்டுகிறான்
நாற்றை நடுகிறான்
காலை முதல், பொழுது
சாயும் வரை, உழைக்கிறான் ;
சிந்தும் வியற்கைத் துளிகளை
இறைக்கும் நீரோடு சேர்க்கிறான்
மண்ணிற்கு வளம் சேர்க்க,
முப்போகம் காண்கிறான்;
உழைப்பில் இவன் காண்பதோ
மனத்திருப்தி , முதலாளிக்கு
போய் சேருகிறது உழைப்பின் பலன்கள்
உழுது நெல் விளைக்காது போயின்
மண்ணில் பசி தீர்க்க யார் வருவார்
அதனால்தான் 'உழவுக்கும்,தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்',என்றார் புலவர்
உழவைத்தவிர்த்து இப்படித்தான்
மற்ற தொழில்களிலும் தொழிலாளி
உழைத்து உழைத்து ஓடாய்ப்போகிறான்
வானேறும் கட்டிடப்பணி, வாகனங்கள்
கட்டமைப்பணி, கப்பல் தொழிற்சாலை,
இப்படி எத்தனையோ தொழில்கள்
நாட்டின் முதுகெலும்பு அதன் பின்னே
தொழிலாளி ......இவர்கள் நலன் காக்க
வந்தவைதான் தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்கங்கள் தீர்மானம்
மே மதம் முதல் தேதி தொழிலார்
தினம் தொழிலாளர் விழுப்புணர்ச்சி
நாள், வருடம் பூரா உழைத்து கண்ட
பலனில் தொழிலாளி களிக்கும் நாள்
உழைப்பாளியின் இன்பத்திருநாள்
இந்த இன்றைய மே முதல் தேதி
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்வோம் 'உழைப்பின் மேன்மையை
உணர்வோம், தொழிலாளியின்
நலனில் அக்கறை வைப்போம்
அவரை காப்போம் என்றும்.
அவர்கள் வாழையடி வாழையாய்
நம்மைக்காத்து வருகிறார்கள்
தங்கள் உழைப்பால் உழைப்பின்
பலனாலே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-May-18, 7:31 am)
பார்வை : 128

மேலே