கவிஞர் அகரமுதல்வன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் அகரமுதல்வன்
இடம்:  கிளிநொச்சி
பிறந்த தேதி :  11-Aug-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2012
பார்த்தவர்கள்:  1666
புள்ளி:  158

என்னைப் பற்றி...

ஆயுத சத்தங்கள் அற்று அழிக்கப்படும் இனத்தின் நிதர்சனமாக இனத்தின் தேசிய வாழ்வை வலியுறுத்தும் படைப்புக்களை உருவாக்கி கொள்வதனால் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை உடைத்தெறியும் சக்தி என் எழுத்துக்களுக்கு இருக்கிறது.

-அகரமுதல்வன்
05.05.2014

என் படைப்புகள்
கவிஞர் அகரமுதல்வன் செய்திகள்
கவிஞர் அகரமுதல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2016 1:22 pm

செத்த சிம்மத்தின் வாயில் நெளியும் புழுக்களிடம்
ஏதோ ஓர் கீரிடம் இளவெயிலில் மின்னியது
வேட்டை வாயின் சிதிலத்திலிருந்து ஊனமாய்
சருகுக்குள் துள்ளின மான்களின் புள்ளிகள்
சிங்கத்தின் கடைசி இரையின் வாடை பிடிக்காது
சவ்வரிசி கொட்டுண்டுவதைப் போல
சில புழுக்கள் சிம்ம சடலத்திலிருந்து உதிர்ந்தன
காற்றின் தறி முழுக்க சிம்மம் புழுத்த மணம்
நெடுநதிக் காட்டின் விலங்குகள்
நீரருந்திக் கொண்டே விசிலடித்தார்கள்
மேகம் கலைந்து வானம் உதறி
கீழே விழும் இருள் திடீரென்று பெருத்தது
காட்டின் துயில் காலம்
ஒரு அக்கிரமத்தின் பிணத்தோடு
ஒளி கழுவி நின்றது
புழுக்கள் அச்சுறுத்தும் படியாய்
சாகாச இருளில் பெருகிக் கொண்

மேலும்

நிதர்சனத்தை விவாதம் செய்யும் வகையில் கவியின் கேள்விகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jan-2016 1:34 pm
எதார்த்தம் எடுத்தியம்பிடும் எதார்த்தமான கேள்வி .!! 03-Jan-2016 1:28 pm
கவிஞர் அகரமுதல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 11:33 pm

மீதியின் மீதியிலிருந்து
சிதையும் பகலை
இரவு ஒழிக்கிறது
அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா
பொய்யின் கனவுக்கு பாத்திரமானது
துடிக்கும் சில நட்சத்திரங்கள்
அதற்கே அந்நியமானது
நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில்
தூங்கி விடுகிறீர்கள்
அல்லது புணர்கிறீர்கள்
எப்போதும் போல
அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள்
உங்களுக்கு தெரிந்திராத இரவுகள்
என்னிடம் இருக்கிறது
அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து
மழித்த பகலின் உரோமங்கள்
அதன் முகத்திலிருப்பது
மலினமான ஒரு இருட்டு
நான் மீதியின் மீதியிலிருந்து
எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன்
என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய்
உம் கழல் படுகிறது
அது உங்களுக்கு பகலாகவு

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:47 am
அருமையான படைப்பு.. //நான் மீதியின் மீதியிலிருந்து எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன் என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய் உம் கழல் படுகிறது // என்ன கனமான வரிகள்.. வாழ்த்துக்கள்.. 29-Dec-2015 10:49 am
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சுனாமி ....நன்று ....வாழ்த்துகள் 29-Dec-2015 10:00 am
கவிஞர் அகரமுதல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 10:22 am

சாத்தானின் குதிரைகள் கால்களைத் தூக்கி கனைக்க
அங்கவீனமான மக்கள் சவப்பெட்டியை சூழ்ந்தழுகிறார்கள்
எத்தனையோ தடவைகள் கொல்லப்பட்ட
தனது புதல்வியை சாம்பலாக்கும் தாயகம்
ஒரு கொலையாளி

கிளிநொச்சிப் பட்டினத்தின் தெருக்களில்
தாயாகி நின்ற அவளின் குரல் நிறைகிறது
இருப்பவற்றையும் இழக்கும் தொலைதூரங்களில்
அவளின் சிரிப்பை, பேச்சை
நான் பாதுகாக்கிறேன்

கனவுகளுக்குள் ஊர்ந்து திரிகின்றன சன்னங்கள்
எனது தலைக்குள் வெடிக்கிறது
அவளின் கைத்துப்பாக்கி

அக்கா
உன்னைப் போர்த்த எமக்கொரு கொடிவேண்டும்
உன்னைத் தாக்க எமக்கொரு நிலம்வேண்டும்
வேறெதுவும் வேண்டாம்
அதுவரை யாம் எரிவோம்

இறந்து கிடக்கும் நீ

மேலும்

கவிஞர் அகரமுதல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 3:24 pm

இந்தப் பொழுதிற்கென பெய்யும் மழையில்
திளைப்பதற்கும் உறைவதற்கும்
ஆரத்தழுவிய ஞாபகங்கள் எனக்கில்லை
அழுகையும் குருதியும் நீரெனப் பருகிய
கோரத்தின் மேற்குவானம் தேய்வதாயுமில்லை
கடலுக்கு திரும்பியிரா பகல் காற்று
ஓலம் தொற்றி சுழன்று கசிய
பெய்யும் மழைக்கு என்னைத் தெரியாது
குருதி தோய்ந்த கனவிற்கு மழையில்லை
சருகுகளையும் நனைப்பதில்லை
சவமென்று என்மீது வீழாத மழை
ஆகாசத்தில் அறுபட்டு உருச்சிதையும்
துயரமான கரையில்
பூத்துப்போயிருக்கும் உள்ளங்காலில்
கடல் நிறைய
பாழடைந்த வனத்தின் வேர் வெடித்து
கீழிருந்து வீசுகிறது
இருப்பின் தெறிப்பு மழை.

நன்றி - கணையாழி இதழ்

மேலும்

நல்ல கவி தொழாரே ,,........ 04-Aug-2015 8:28 pm
வழக்கம் போலவே அருமை...அகரமுதல்வன். 04-Aug-2015 7:46 pm
கவிஞர் அகரமுதல்வன் அளித்த படைப்பை (public) கோபி சேகுவேரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Jan-2014 10:26 am

வீதியெலாம் எரிந்த
ஈழத் தமிழனுக்காய்-உடல்
மேனியெலாம் தீப்பிடித்த
ஒரு தமிழன்

தமிழ்ச் சாதியின்
அழு குரலும்
ஓலமும்
கண்டு கொதி நீர் வடித்த
முத்து
படைக்கலங்கள் அற்று
தன்னம் தனியே
வாழ்ந்த தமிழ் வீரத்தின் சொத்து

ஊழியாடி உதிரம் குடித்து
ஆழி சூழ் தமிழீழத்தை
அழி அழியெனப் பாடிய
இத்(த)தாலியையும்
சக்கர நாற்காலியையும்
தன் தீயால் சிரித்து –கோபத்தை
கொப்பளித்தவன்

அய்ந்து விரல்காரியின் மடியில்
ஆதவனை அடகு வைத்து
சிதைந்து போகும் தமிழன் உயிரில்
வரங்களை வாங்கிய
கோபாலபுரத்தினை
ஊழிக் கொட்டகையென
உலகுக்கு உணர்த்தியவன்
தன் உயிரை அக்கினிக்கு
உயில் எழுதி
சாத்தியவன்

முற்றம் முழுதும் ம

மேலும்

அருமை 16-Feb-2016 3:25 pm
உணர்ச்சிகள் ..உணர முடிகிறது.. கண்ணீரும் வலியும் தீராமல் இருக்கிறது 16-Feb-2016 3:17 pm
கவிஞர் அகரமுதல்வன் அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2014 9:53 pm

இயலாமையின் ஆலாபனையோடு
வாள்களை உறையில் செருகி நாட்களாகியது
அல்லாது போனால்
ஊழி சூழ் கடலில் முனைகளைப் புதைத்தது

ஆதியொன்றில் குளம்படிகளோடு
அதிகாரமாய் முன்னேறிய குதிரைகள்
ஈட்டிகளால் நொண்டிகளாகிய
தொன்மத்தின் நிலத்தில்
செங்குத்தாய் எழும்புகிறது அவலம்

முன்னர் தொலைந்தவர்களை
கைகளில் படங்களாக தூக்கியளும்
எல்லோர் மனங்களிலும்
கையாலாகத்தனத்தின் உருவம்
கூர் தீட்ட

“வெள்ளை வான்கள்’ கொண்டு சென்ற
பிள்ளைகளின் தேடலோடு
நாதியற்று எரிந்து சுருளும்
இந்தச் சரீரமாய்

இனியொரு போதும் அண்ணன்களுக்காய் கண்ணீர் விடுவதில்லை
இனியொரு போதும் பிள்ளைகளுக்காய் கண்ணீர் விடுவதில்லை
இனியொரு

மேலும்

வலி உணர்த்தும் வரிகள்....அருமை நண்பா ! 28-Mar-2014 3:39 pm
எது வாழ்வின் நிஜத்தைச் சொல்கிறதோ...எது படிப்பவனை...தன் உலகம் நோக்கி நகர்த்துகிறதோ...அதுதான் கவிதை அகரமுதல்வன். இது...."கவிதை". வாழ்த்துக்கள். 26-Mar-2014 1:53 pm
மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் அவர்களுக்குள் ஒற்றுமை வேண்டும் இல்லையென்றால் இந்த கண்ணீர் நிற்காது 26-Mar-2014 7:31 am
ஆமாம் கவிஞர் காள் ! நீங்கள் சொல்வது சரியெனத் தகும் .KS.Kalai 26-Mar-2014 6:10 am
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 1:44 am

கருக்கட்டியிருந்தது கார்மேகம்.
பெய்துவிடக் கூடாதென்பதில் இருந்தது
ஓட்டை வீட்டுக்காரனின் சோகம்.

விவசாயி சிந்தினான் வியர்வை.
அமோக விளைச்சல் விலையானபோது
இடைத்தரகன் அடைந்தான் உயர்வை.

பள்ளியில் ஆசிரியரின் பாராட்டு.
புகழ்ச்சியில் மயங்கிய மாணவி
பத்தாம் மாதம் பாடினாள் தாலாட்டு.

சுவையாகத்தான் சமைத்திருந்தாய் பிரியாணி.
கூவவில்லை என்று வெட்டிய சேவல்
ஊமை என்பதை புரியா நீ.

கோவில் இடித்த புகாரை
வாங்கிப் படித்த அரசு
கட்டி முடித்தது விகாரை.

( ஒரு பரீட்ச்சார்த்த முயற்சியாக எழுதியுள்ளேன்.
விதிகள் தவறியிருப்பின் சுட்டிக்காட்டலாம்)

மேலும்

முயன்று பாருங்கள் முயற்சி கைகொடுக்கும் .நன்றிகள் சந்தோஷ். 25-Dec-2013 1:52 am
லிமரைக்கூ எப்படி எழுத வேண்டும் என்று கற்று தருகிறது இந்த கவிதை. அருமை ஐயா !! நானும் முயற்சிக்கிறேன். 25-Dec-2013 1:40 am
நன்றிகள் ஐயா 25-Dec-2013 1:15 am
நன்றிகள் குமரி. 25-Dec-2013 1:14 am
கவிஞர் அகரமுதல்வன் அளித்த படைப்பில் (public) rameshalam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 9:10 am

துடி துடித்து புலரும் பொழுதொன்றில்
இரவுகளின் சாம்பல்களை தட்டி
ஜீவிதத்திற்குள் பயணமாகும்
என் கால்களில் சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கிறது
கைகளில் விலங்குகளும்
நகத் தசைகளில் ஊசிகளும் குத்தி நிற்க
ரணங்களின் மேடுகளில் முளைவிடும் புற்களென
என்னிலிருந்து வழியும் ரத்தங்கள்
காலத்தின் குளத்தில் குமுழிவிடுகிறது
நோகாத கண்கொண்டு நோக்கும் குருடர்க்கும்
கேளாத செவிகொண்டு கேட்கும் செவிடர்க்கும்
சொட்டுச் சொட்டாக மரணிப்பது
அசரீரியின் நிழலாகவும் இசையாகவும் நீள
கவிதையின் தொடக்கத்தில் என்னுயிர்
இருந்ததைவிட
இன்னும் மரணித்துவிட்டதை
நீங்களும் அறிய வாய்ப்பில்லை
எழுதிக் கொண்டிருக்கும் இக்கவி

மேலும்

ரொம்ப...ரொம்ப...அருமை அகரமுதல்வன். உங்களின் கவிதையைப் படிக்கும் போதெல்லாம்...தமிழனாய் இருக்கும் குற்ற உணர்வு எனக்கு மேலோங்குகிறது...அகரமுதல்வன். உங்கள் கவிதைகள்... ஈழத் தமிழர்களின் வலியைப் புரிய வைப்பதோடு மட்டுமில்லாமல் உணரவைக்கவும் செய்கின்றன. உங்கள் கவிதைகளின் தனித்துவமாய் இதை நான்...நீங்கள் எழுதும் எல்லாக் கவிதைகளிலும் உணர்கிறேன். வழக்கம் போல்... என் வாழ்த்துக்களும்...அன்புகளும்....ரமேஷ். 20-Dec-2013 12:43 pm
கவிதை வரிகள் நெகிழ வைக்கிறது. 19-Dec-2013 12:56 pm
உண்மைதான் தூங்குபவனை எழுப்பிவிடலாம் அனால் துங்குவது போல நடிப்பவர்களை என்னதான் செய்ய முடியும் ?...எபோதும் போலவே உணர்வுகளை கொட்டும் கவி அருமை ... 19-Dec-2013 9:44 am
உண்மையிலும் "கேட்கின்ற செவிகொண்டு கேளாத செவிடர்களும்" என்பது தான் கவித்துவமாய் சரியானது .தோழர்.ஆனால் நான் சொல்ல வந்தது முதலே இவர்கள் தீர்மானித்து செவிடர்களாகவே எங்கள் அழுகையை கேட்கிறார்கள் என்பது தான் . 19-Dec-2013 9:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (76)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (76)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (77)

rasigan js raj

rasigan js raj

யாழ்ப்பாணம்
பகவதிமணிவண்ணன்

பகவதிமணிவண்ணன்

குருவிகுளம்
மேலே