கவிஞர் அகரமுதல்வன்- கருத்துகள்

ஆமாம் கவிஞர் காள் ! நீங்கள் சொல்வது சரியெனத் தகும் .KS.Kalai

என்ன தோழர் எனக்கு விளங்கவில்லை.KS.கலை .

கருக்கட்டியிருந்தது கார்மேகம்.
பெய்துவிடக் கூடாதென்பதில் இருந்தது
ஓட்டை வீட்டுக்காரனின் சோகம்.

ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிற முயற்சிக்கு உங்கள் கவிதை சென்று கொண்டிருக்கிறது அப்படியே செல்லட்டும் .வாழ்த்துக்கள் .

உண்மையிலும் "கேட்கின்ற செவிகொண்டு கேளாத செவிடர்களும்" என்பது தான் கவித்துவமாய் சரியானது .தோழர்.ஆனால் நான் சொல்ல வந்தது முதலே இவர்கள் தீர்மானித்து செவிடர்களாகவே எங்கள் அழுகையை கேட்கிறார்கள் என்பது தான் .

உங்களோடு உரசிக் கொள்ள
எங்களூர் ஊடக நரிகள் ஓடிவரும் !
குப்பிகளில் நிறைத்தாவது கொஞ்சம்
மூத்திரம் கொடுங்கள்...
அதைக் குடித்தாவது - சொட்டு
புத்திவரட்டும் இந்த போக்கிரிகளுக்கு !


அருமை கலை.

வணக்கம் வாழ்த்துக்கள் .ப்ரியா என்பவர் யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் என்கிற வரிக்கு சொந்தமான படைப்பாளி தானே .உங்கள் காதலியா தோழா? . . . .வாழ்த்துக்கள்

அவர்கள் குறித்து சொல்வதற்கோ அல்லது பிறர் குறித்து சொல்வதற்கோ எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை .தோழர் அகன் நடத்தும் அகரம் பத்திரிக்கையில் எனது நூலிற்கான திறனாய்வை எழுதியிருந்த தோழர் அபி எனக்கே காய்ச்சல் வருமளவுக்கு புகழ்ந்து தள்ளாமல் படைப்பின் பண்புக்கு ஏற்ற படியாக எழுதியிருந்தார் .அந்த பத்திரிக்கையை பார்த்து தான் அந்த கல்லூரியில் இருந்து என்னை அழைத்தார்கள் .இது இடம்பெற அவர்களே காரணம் என்பதனை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன் .

அல்லல் தணிக்க
அலைகடல்தாண்டி வரும்
ஆசிய அபலைகளிடம்
சூரத்தனம் காட்டுகின்ற
-------அயோக்கிய நரிகளே-
-------அமரிக்கனிடமும் பிரிட்டிஷ்ஷிடமும்
-------ஏன் இல்லை இந்த ஆட்டம் ?
-------தொங்கவிடுவான் என்ற பயமா ?

அருமையான காத்திரப் படைப்பு .ஆணாதிக்க வெறியும்அடிப்படை மதவாத கருத்துக்களும் இப்படியான நிகழ்வுகளை பிரசவிக்கிறது .

நீ இதுவரை எழுதியதெல்லாம்
நடந்திருக்குமெனில்..
ஈழம் மலர்ந்திருக்கும்..
ராஜபக்ஷே தற்கொலை செய்திருப்பான்..
சிரியாவில் ரசாயன ஆயுதங்கள்
சிறுவர்களைக் கொன்றிருக்காது..!
முசாபரில் கலவரம் நடந்திருக்காது.!
சிலபோது..
ஆயிரம் புரட்சிகள் மலர்ந்திருக்கும்
நாலாம் உலகப்போரும் முடிந்திருக்கும்..!

இலக்கியத்தை மதிக்கும் அதனை வாசிக்கும் பண்பு தமிழ்ச் சமூகத்திடம் எவ்வளவுக்கு எவ்வளவு போதாததோ அவ்வாறே வெகுசன மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் வலிகளைச் சொல்லும் இலக்கியங்களும் குறைவே . தோழர் அபி அவர்கள் கூறியிருக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையாகவே இலக்கியத்தின் விளைவாக நடந்திருக்கும் ஆனால் நிகழ்வது வேறு ஏதோ ஏனெனில் இங்கு வாசிப்பவர்களும் எழுதுபவர்களும் எழுத்துக்களும் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை .

குளத்தின் சலனங்களில்...
குழைந்த ஒரு நிலவென...
வளைந்து கசங்கியது மனது.

என்னையா கவிதை . ... .அருமை ஒரு கல்யாண்ஜியை நினைவுப்படுத்தும் உங்கள் கவிதைகள் .

நான்...
எப்படி இருக்க வேண்டுமென
நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

நீ ...
எப்படி இருக்க வேண்டுமென
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நானும்...நீயும்...

நாமாக இருப்பதை...
இப்படித்தான் மறந்து போனோம்...
யுகம்..யுகங்களாய்.

சவுக்கடி பலருக்கு

அருமை அருமை இப்படியானவர்கள் உருப்படுவது நிகழாத ஒன்று .மிகவும் சரியான சமூக நோக்கு சொல்லும் பாங்கு மிக அழகு .

ஊர் தொலைத்தவனை...
அகதியாய் திரிந்தவனை...
நடக்கும் வீதியில்....
பாதுகாப்பற்று பலமிழந்த பெண்களை...
ஆசிரியர்களால் சிதைக்கப்பட்ட
மாணவச் சிறுமிகளை...

என்பார்வையில் நீ
என்னால் மிதிக்கப்படுகின்ற காலனி அல்ல
என்னை சுமக்கின்ற இரண்டாம் கருவறை .

நல்ல வரி . . . . .வாழ்த்துக்கள்

கணவனைத்
தெருவிலே தொலைத்து,
குழந்தையைக்
கருவிலே கலைத்து,
கூற்றனுக்கும் வேண்டா
உயிர் சுமக்கும் கூடுகளின்
கேட்டினைச் சுமக்கும் நாடிது...! கவிதை கவிதை . . . . .


வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையிலே அல்லற்படும்
ஏழை மக்களின்
கீற்றுக் குடிசைக்கும்
சோற்றுப் பருக்கைக்கும்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி
அறிக்கைவிட்டு அலைகிறார்கள்
நல்லூர் கந்தனுக்கும்
நயினை நாகபூசனிக்கும்
அள்ளிக் கொடுக்கும்
அயோக்கியர்கள் !


மிகக் காத்திரமானது உண்மையானது .இது தான் மக்களுக்கான மக்களின் வலிகளை சொல்லும் படைப்பு .

தமிழையும் தமிழனையும் மானிட அவலங்களையும் பாடுகின்ற ஒரு கவிஞராக வரவேண்டும் .

இளைஞர்களின் காவியமாய் ,
பழமொழியாய்,முதுமொழியாய் , ?

பள்ளியில் பயிற்றுவிக்கும் பைந்தமிழாய்?

இவ்வளவும் சமகாலத்தில் தமிழ்நாட்டில் நிலவினால் மகிழ்ச்சியே .

மானுடத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்தேறிய இந்தக் கலவரம் மிகவும் வெட்க கேடானது .திவ்யா இளவரசனின் காதலை சாதியக் கட்சிகள் தங்கள் ஓட்டுக்காய் அவமதித்து இருக்கிறார்கள் .

அருமை தோழர்
படைப்புகள் என்பது சமூகத்திற்கே

சாதிச்சங்கிலிகளை
அறுக்கமுடியாத அவமானத்தில்..
வான் பார்க்காமல்
வெட்கித் தலைகுனிந்து,
மண்நோக்கி விழுந்து
செத்துப்போனான் இளவரசன்..,
அதனால் நமக்கென்ன கவலை.

தமிழ்நாட்டின் உண்மை நிலவரம்

தூக்கியாச்சு அப்பனுடைய பாடை
திரும்பி வரும் வழியிலேயே - பிள்ளைகள்
கூட்டியாச்சு சொத்துப்பிரிக்க மேடை !

அருமையான பதிவு குமுதாயத்தின் அவல முகம் .
மிகச் சிறப்பாக இருக்கிறது .

அருமையான கவிதை தோழர் வினோத் .
பலநாட்களின் பின்னர் உங்கள் எழுத்தைப் படித்தேன் .
உலோக முனையால்
நாங்கள் தொடாத
உலக முனைகளில்லை !

பெரும்பாலும் பெண்களைப்
பற்றி பற்றி உளறுமென்னை,
பெண்ணாக மாற்றும் பெண்களும்
உண்டு - பெரும்பாலும் நான்
அவனோ, அவளோ அல்லாத
அதுவாகவே விரும்புகிறேன் !
என்கிற வரிகள் மிகவும் பிடித்த வரிகள் வாழ்த்துக்கள் .

மிகச் சரியான பதிவு யாராலும் மறுக்கமுடியாத அவமானம் .பாராட்டுக்கள் தோழர்

யாரும் அறியாத
ஒரு பெரும் கடவுள்...
என் அம்மாவின் கர்ப்பம் திறந்து
நான் வருகையில்...
மெல்லிய பூ கொண்டு
என் நாவில் எழுதிய மொழி...
மிகவும் கவித்துவமிக்க வரி .மிகச் சிறப்பான படைப்பு. வாய்ப்புகள் கிடைக்கும் போது தளத்தில் நான் தேடிப்படிக்கும் கவிஞர்களில் நீங்களும் ஒருவர் .


கவிஞர் அகரமுதல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே