செருப்பு
விலைகொடுத்து விரும்பிவாங்கிய
விருந்தாளி நீயானால் வீட்டுக்குள்
கூட்டிவர தடையிட்டார்களே என்செய்வேன்
வாசல்வரை அழைத்து வந்து
ஓரத்தில் உன்னை உதறிச்செல்வதில்
உண்மையில் மிகவும் வருத்தமெனக்கு
என்னுடன் வந்துசேர
இறந்த உயிரில் இருந்து
பிறந்தாயோ நீ
நான் இதமாக நடக்க
உன் பாதம் தெய்துக்கொன்டாயே
என் பாதத்தை துளைக்கவந்ததை
உன் தேகத்தில் ஏற்றிக்கொண்டாயே
உன் அறுந்தஉடம்பை தைக்கயில்
ஊசி துளைத்தது உன்தேகத்தில்
உண்மையில் வலியால் ஸ்ஸ் என்றேன் நான்
உன்னை சிலநேரம் பிரியநேர்ந்தாலும்
மீண்டும் ஒடோடோடி வந்து
அணைத்துக் கொள்வதில் ஆனந்தம் அதிகம்
இன்னும் சொல்லலாம் உன்பெருமை ஆயிரம்
இங்குநான் சொல்லவேண்டும் கட்டாயம் ஒன்று
என்பார்வையில் நீ
என்னால் மிதிக்கப்படுகின்ற காலனி அல்ல
என்னை சுமக்கின்ற இரண்டாம் கருவறை
எத்தனை வலிபொறுத்தாய் என்பாததின்கீழ்
இதோ இந்தகவி உன் பாததின்மேல்
.................................................................................
சரவணா