பாலைவனக் காட்டேரிகள் -கே.எஸ்.கலை

மரபுகளை விழுங்கி
மக்களைத்தின்று மகிழும்
பாலைவனக் காட்டேரிகளின்
குப்பைச் சிந்தையில்
குடியிருக்கும்--
-------குரூரப் புத்திகளைக்
-------கிழித்தெறிய விரக்தியில்
-------கத்துகிறது என் விரல்கள் !

மண்ணை
வைத்துக் கணித்தாலும்
மனத்தை
வைத்துக் கணித்தாலும்
-------மரபுகள் இழந்த அரபிகள்
-------பாலைகள் என்பதில்
-------ஐயமில்லை !

வாழ வக்கின்றி
கடல்தாண்டி ஓடிவந்து
வாடிமடியும் ஏழைகளின்
கனாக்களை, வினாக் குறியாக்கி
உயிர்ப்பிடுங்கி உதிரம்சப்பும்
-------ஓநாய்க் கூட்டங்களே-
-------உங்கள் உடம்புக்குள் ஓடுவதும்
-------எரிபொருளா ?

புழுக்களுக்கு கொடுக்கும்
மரியாதைக்கூட இல்லாமல்
எங்கள் பெண்டிரைக்
குழுக்களாய் தின்றுதீர்த்து
வீதியிலும் கடலிலும்
-------வீசியெறியும் வெறிநாய்களே-
-------மனிதம் ஒருகிராம்
-------உங்களூரில் என்னவிலை ?

அப்பாவிக்
கன்னிகளைத் தின்றுவிட்டு,
திருடியென்றும் விபச்சாரியென்றும்
பட்டம் சூட்டிக், கல்லடித்துக் கொல்லுகின்ற
-------புலால்தின்னிக் கழுகுகளே-
-------பன்னிகளைத் தின்றால் ஹராம் என்கிறீர்களே
-------கன்னிகளின் உயிர்த்தின்னுவது ஹலாலா?

அல்லல் தணிக்க
அலைகடல்தாண்டி வரும்
ஆசிய அபலைகளிடம்
சூரத்தனம் காட்டுகின்ற
-------அயோக்கிய நரிகளே-
-------அமரிக்கனிடமும் பிரிட்டிஷ்ஷிடமும்
-------ஏன் இல்லை இந்த ஆட்டம் ?
-------தொங்கவிடுவான் என்ற பயமா ?

மூவேளைச் சோற்றுக்கு
மொத்தமும் துறந்துவிட்டு
கடல்தாண்டி வருபவளை
கற்பழித்துக் கொல்லும்
-------கழிச்சடை ராஜாக்களே-நீங்கள்
-------செய்வதெல்லாம் பாவம்- செய்துவிட்டு
-------ஐவேளை தொழுதென்ன லாபம் ?

பணத்தின் வைப்பாட்டியாய்ச்
சட்டமொன்றை வைத்துக்கொண்டு
ஊருக்கு ஒருநீதியும்
ஊருக்குவந்த ஏழைக்கு - ஒரு
நீதியும் சொல்லும்
-------பாலைவனக் காட்டேரிகளே-
-------காசில்லாதவனுக்கு மட்டுமா
-------கழுத்தறுக்கும் உன் சட்டம் ?

பணிப்பெண்களாய்
அங்குவந்து – பிணங்களாய்,
பிணிப்பெண்களாய்
பிறந்தவூர் நோக்கித் திரும்பிவரும்
ஏழைகளின் சாபங்கள் ஒருநாள்...
-------எரிபொருளைவிட வேகமாய்
-------கோழைகள் உங்கள்
-------குலத்தையே எரிக்கும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (25-Sep-13, 8:25 am)
பார்வை : 359

மேலே