லிமரைக்கூ-II-கேஎஸ்கலை

சாமியிடம் மழைகேட்டது உள்ளம்
கருணை கொண்டு கடவுள்தந்த மழையால்
அள்ளிப்போனது வீட்டை வெள்ளம் !
═✿═
தூக்கியாச்சு அப்பனுடைய பாடை
திரும்பி வரும் வழியிலேயே - பிள்ளைகள்
கூட்டியாச்சு சொத்துப்பிரிக்க மேடை !
═✿═
ரெட்டைக் கால் வரங்கள்
தினந்தோறும் சண்டை - சிரிக்கின்றன
ஒற்றைக்கால் மரங்கள் !
═✿═
தமிழ் தாய்க்கு நூறுகோடி
உண்ணக்கூட வக்கிலாமல் - தமிழன்
முடங்கிக் கிடப்பது தெருக்கோடி !
═✿═
உள்ளவன் ஓடுகிறான் கூடி
உணவில்லாதவன் தெருத் தெருவாய்
திணறுகிறான் அதைத் தேடி !
═✿═
காலை மாலையெல்லாம் தியானம்
கைவிரித்துவிட்டுக் கடவுள் காட்டுவதோ
கல்லறைக் காட்டு மயானம் !

=========
லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும்.
லிமரைக்கூ வேறு லிமரிக் வேறு என்பதை கவனத்தில் கொள்ளவும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (17-Jun-13, 9:02 am)
பார்வை : 497

மேலே