எப்போதும் காய்வதில்லை....

கடவுள்
அன்பானவர்தான்...

ஆனால்
ஆயுதம் இல்லாமல்
இருப்பதில்லை.
*********************************************************
உதிர்ந்த சிறகு....
பேசிக் கொண்டே இருக்கிறது...

தவழ்ந்த வானத்தையும்...
சுமந்த காற்றையும்...

தரை மேல் விழுந்த கணத்தை
மறக்க நினைத்த படி.
*********************************************************
நான்...
எப்படி இருக்க வேண்டுமென
நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

நீ ...
எப்படி இருக்க வேண்டுமென
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நானும்...நீயும்...

நாமாக இருப்பதை...
இப்படித்தான் மறந்து போனோம்...
யுகம்..யுகங்களாய்.
************************************************************
எப்பொழுதோ....
நீ சிந்திய
ஒரு கண்ணீர்த் துளியைத்தான்....
இந்தக் கவிதையில் எழுதி இருந்தேன்.

சில ஈரங்கள்...
எப்போதும் காய்வதில்லை.
************************************************************

எழுதியவர் : rameshalam (30-Aug-13, 4:57 pm)
பார்வை : 70

மேலே