நான் எழுதாத கவிதை....

எழுதுவதற்கான கவிதைகள்...
நிறைய இருந்தன என்னிடம்..

ஊர் தொலைத்தவனை...
அகதியாய் திரிந்தவனை...
நடக்கும் வீதியில்....
பாதுகாப்பற்று பலமிழந்த பெண்களை...
ஆசிரியர்களால் சிதைக்கப்பட்ட
மாணவச் சிறுமிகளை...
சாமியார்களால்...
களவாடப்பட்ட கற்புகளை...
ஊழலில் சுரண்டப்பட்ட மக்களை...
இருபத்தியேழு ரூபாயில்...
ஒருநாள் வாழ்க்கையை
முடித்துக் கொள்ளச் சொல்லும் அரசாங்கத்தை...
விலையில்லாப் பொருட்களாய்
மாறிக் கொண்டிருக்கும் மக்களை....
எல்லையில் உயிரிழந்தவனின்
தியாகங்களைக் கொச்சைப் படுத்தும் நாக்குகளை..
சோற்றுக்கு வழியில்லை என்றாலும்
நடிகனுக்குப் பால் குடம் தூக்கும் இரசிகனை..
.............
.............
இப்படி...
உன்னையும்...என்னையும் சொல்ல
எவ்வளவோ இருந்தும்....

உன் கண்களைப் பார்த்து....
நிலவு என்றும்...
மீன் என்றும்தான்...
இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன்...

காதலை மட்டுமே கடை விரிக்கும்...
என் கவிதையால்...

நான் எப்படி உருப்படுவேன்?...சொல்.

எழுதியவர் : rameshalam (3-Sep-13, 7:40 pm)
பார்வை : 135

மேலே