லிமரைக்கூ
கருக்கட்டியிருந்தது கார்மேகம்.
பெய்துவிடக் கூடாதென்பதில் இருந்தது
ஓட்டை வீட்டுக்காரனின் சோகம்.
விவசாயி சிந்தினான் வியர்வை.
அமோக விளைச்சல் விலையானபோது
இடைத்தரகன் அடைந்தான் உயர்வை.
பள்ளியில் ஆசிரியரின் பாராட்டு.
புகழ்ச்சியில் மயங்கிய மாணவி
பத்தாம் மாதம் பாடினாள் தாலாட்டு.
சுவையாகத்தான் சமைத்திருந்தாய் பிரியாணி.
கூவவில்லை என்று வெட்டிய சேவல்
ஊமை என்பதை புரியா நீ.
கோவில் இடித்த புகாரை
வாங்கிப் படித்த அரசு
கட்டி முடித்தது விகாரை.
( ஒரு பரீட்ச்சார்த்த முயற்சியாக எழுதியுள்ளேன்.
விதிகள் தவறியிருப்பின் சுட்டிக்காட்டலாம்)