நின்நிலை இறைநிலை அதுவே கண்டேனே

வானகம் வையகம் என்றும் இசைத்திட ;
என்னிடத்தில் உன்னை எடுத்தேன்;

ஏக்கம் எண்ணம் எனக்கு வந்தது;
எப்படி வந்தது எனக்கு தெரிந்தது;
பிறத்தல் ஒரு சனம் ;
இறத்தலும் ஒரு சனமே !!

இரு வினை பிறப்பு,
விட்டுச் செல்பவன் நீ!
எதிர் வினை இறப்பு,
எடுத்துக் கொள்பவன் நான் !

மாறும் மாயை உலகத்தில்
சாபத்தை ஒரு வரமாக,
வரவேற்று, வசந்தம் வீச,
சாதனம் வேண்டும் - அது தியாகமே!!

நம்மில் மலர வேண்டும் அது,
தினம் வளர வேண்டும்,
மனம் புரிதல் வேண்டும்,
புரிதலில் தெளிதல் வேண்டும்,
தெளிதலில் நிலைத்தல் வேண்டும்,
நிலைத்தலில் நின்றல் வேண்டும்,
நின்நிலை இறைநிலை அதுவே கண்டேனே!

எழுதியவர் : செல்வன் ராஜன் (27-Feb-24, 10:04 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
பார்வை : 99

மேலே