கண்ணனுக்காக வாடும் ராதை-- காதலில் தனிமை

என்னைவிட்டு எங்கு போனாயோ கண்ணா

உன்னையே என்மனதில் வைத்து தெய்வமாய்ப்

பூஜிக்கும் உந்தனன்பு ராதைனா னிங்கு

உனக்காக காத்திருக்க நீயெங்கு போனாயோ

மாயோனே வந்துவிடு என்னோடு இங்கிருக்க

இல்லையேல் யமுனையில் என்னைநான் மூழ்கியே

மாய்த்துக்கொள் வேன்சத்தியம் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Feb-24, 8:38 am)
பார்வை : 124

மேலே