பார்வையில் மலர்ந்த காதல்

அவள் பார்வை என்மீது பட்டது
என்னை நான் மறந்தேன்
என்னுள் எல்லாம் அவளானதால்
என்னை நான் மறந்தேன்
நான் பார்ப்பதெல்லாம் அவளானதால்
என்மனம் அவள் மனம் சங்கமமானது
ஈருடல் ஓருயிராய் போவது உணர்ந்தேன்
அது ஓர் காதல் மலரானதோ !
கண் திறந்து பார்த்தேன்
என்னை நானே கொஞ்சம் கிள்ளிப் பார்த்தேன்
என்னை உணர்ந்தேன் இப்போது நான்
என்னைத் தழுவி இப்போது அவள்
என் அரவணைப்பில்
எங்கள் பார்வையில் மலர்ந்த காதல்
நாங்கள் இணைந்தோம்
ஈருடல் ஓருயிராய்....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (25-Feb-24, 4:45 pm)
பார்வை : 197

மேலே