சிவ மயம் எல்லாம் சிவ மயம்

இந்த உலகம் பொருளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு உயிர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒருவருடைய உள்வாங்கும் நிலையை பொருத்து அமைவதே!


உதாரணத்திற்கு ஒரு விந்து என்கிற பொருள் ஒரு முட்டை என்கிற மற்றெரு பொருளுடன் இணைந்து உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறது.


இது ஒரு இயற்கை நியதி.


அதாவது நாம் உண்ணும் உணவு ஒரு பொருள். மிருகங்கள் உண்ணும் ஒரு உணவு ஒரு பொருள்.தாவரங்கள் உண்ணும் உணவு ஒரு பொருள்.


தாவரங்கள் உணவை பூமியில் இருந்து பெறுகின்றன ; பிறகு அவையே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகின்றன. மிருகங்கள் மற்ற மிருகங்களை பொருளாக உண்கின்றன.
ஆக உணவு ஒரு பொருள். உயிர் பற்றிய நினைப்பு உள்ள வரை இந்த போராட்டம் தொடரும்-மனப் போராட்டம்.

ஆக பொருள் இந்த உலகத்தில் வாழ முதல் படி.


அடுத்து உயர் அற்றவை என்று நாம் கூறும் (உதாரணம் நமக்கு தினமும் பயன் பாட்டில் உள்ள வேலை பொருட்கள் : கதவு முதல் கரண்டி வரை ) தாவரங்கள் நமக்கு ஈய்த நன் கொடைகள் ஆகும்.


மேலும் நாம் அறிவு கொண்டு பயன் பாட்டில் உள்ள பல பொருட்கள் (வேதியியல்) சார்ந்தவை. உதாரணம் நெகிழி .


எது இந்த உலகத்தில் அழிகிறதோ அது மேன்மையானது; உன்னதமானது; அற்புதமானது; அது தன்மை உயிர்ப்பித்து கொண்டே இருக்கும்.

நெகிழி அழியாதது. அது அழிக்கப்படும்.
இதை முரண் என்பர் தமிழர்.


நாம் இறக்கிறோம் என்றால் மீண்டும் பிறக்கிறோம் என்று உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள். ஞானிகள் , யோகிகள் என்றும் எப்போதும் வாழ்வாங்கு வாழ வழி செய்கிறது நம் தமிழ் சமயம். காரணம் அவர்களிடையே பேதம் இல்லை. ஐம்பூதங்களை விட்டுப் பிரிய எப்போதும் அவர்களால் முடியும். அப்படியே சேர்ந்து நமக்கு அறத்தையும் போதிக்கின்றனர்.


ஆக உயர் வாழ முயற்சி வேண்டும். இந்த செயல் நம் வாழ்க்கையின் இரண்டாம் படி.


நம் செயல் மூலம் நாம் இந்த உலகை கட்டமைக்கிறோம். நமக்கு பல பரிமாணங்கள் உண்டு . அதில் ஒன்று விழுப்புணர்வு. இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வருகிறது. இயற்கை அதன் வழி நடத்த முயற்சிக்கிறோம்.

வெற்றி பெற்றால் வாழ்வு; இல்லையேல் சாவு.


கடைசியாக அறிவு நம்மை ஆட்கொள்கிறது. இதன் மூலம் கருத்து உருவாகிறது - வாழ்வின் மூன்றாம் படி நிலை.


கருத்தில் பல முரண்கள்.


முரண்கள் நம்மை செழுமைபடுத்துகிறது. நமக்கு மதம், மொழி, கலாச்சாரம், இடம், உணவு, வேலை , உடை என பல தேவைகள்.

இதன் பொருட்டு உள்ள வேறுபாடுகள்.

அப்பா ; அப்பாடி ; என்ன இது !!! இப்படி ஒரு உலவியில் இந்த உலகத்தை உருட்டுகிறது.


இந்த உருட்டு போதாது என்று இப்போது செயற்கை நுண்ணறிவு.

இந்த மாயை வாழ்வை மையப்படுத்துகிறது. இந்த திரை மனிதனை மாற்றி மாய ஜாலம் புரிகிறது.

எப்படி விலக்குவது; விலகி நிற்பது.


பகவத் கீதையின் பதில்

Detached Attachment.

பொருள்: உலகம் வாழ உயிர்கள் முக்கியம். உயிர்கள் வாழ செயல் முக்கியம். செயல் சிறந்திட கருத்து முக்கியம். கருத்தை யோகமாக மாற்றிட அறம் வேண்டும்.

அறம் அன்பில் விளைவது.

அது அகம். அகம் தூய்மை பெற்றால் புறம் தூய்மை பெரும்.

அன்பே சிவம்.

நாமே ஒரு அற்புதம்; நம்மை நாமே அறிவோம் !

According to OSHO - YOU are NOT in the OCEAN ; YOU are the OCEAN.


YOU are NOT in the UNIVERSE; You are the UNIVERSE.


பிறரிடம் உன்னை காண் ; உன்னை கண்டு எடு.

மற்ற பேய்கள் பறந்து போகும்.


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

எழுதியவர் : செல்வன் ராஜன் (10-Mar-24, 6:27 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
பார்வை : 72

மேலே