கீரை டாக்டர்

உலகத்துல சிறந்த டாக்டர் யாரென்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு டாக்டரின் பெயரைச் சொல்லுவார்கள்.

ஆனால், சிறந்த டாக்டர் நம் வீதிகளில் தினமும் காலையில் "கீரை கீரை" என்று கீரையை விற்றுக்கொண்டு செல்பவர்களே சிறந்த மருத்துவர்.

அதில் சிலர் கீரைகளின் மருத்துவ குணங்களை விளக்கிச் சொல்வது மிகவும் அருமையாக இருக்கும்.

கீரையின் மகத்துவம் தெரியாமல் அலட்சியம் செய்வோர் நோயால் சிக்கித் தவிக்கின்றார்கள்.
அன்றாடம் கீரையை உணவோடு சேர்த்துண்ண உடல்நோய்கள் உங்களை அண்டாது. மருத்துவமனைகள் எல்லாம் நோயாளிகளின் வருகையின்றி தவிக்கும்.

இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் இந்த
"கீரை டாக்டரிடம்" பேரம் செய்து மகிழ்ச்சிக் கொள்ள வேண்டாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் பழமொழியை அனைவரும் நினைவில் கொள்வோம். நலமுடன் வாழ்வோம்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Mar-24, 8:28 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 132

மேலே