அசோக சக்கரம்
போர் முரசு கொட்டியது
கலிங்கம் வென்றான்
மாமன்னன் அசோகன்
போர் களத்தில் வீரர்களின்
வெற்றி முழக்கம்
மன்னன் அசோகனுக்கு
மகிழ்ச்சியில்லை
விண்ணை பிளந்திடும்
வண்ணம் அழுகை குரல்கள்
மன்னன் காதுகளில் ஒலித்தது
பூமியில் சிந்திய ரத்தத்தின் ஈரம்
மன்னனின் மனதை நனைத்தது
சிந்தித்துப் பார்த்தான்
சோகம் கொண்டான்
போர் புரிவதில்லையென
சபதம் கொண்டு
துறந்தான் அரச வாழ்வை
ஆசையே துன்பத்திற்கு காரணம்
என்ற புத்தரின் போதனையை
ஏற்றுக் கொண்டான்
உலக சரித்திரத்தில் இடம் பிடித்து
இந்திய சரித்திரத்தில்
நிரந்தரமான புகழ் கொண்டான்
ஆம்...
நம் நாட்டின் தேசியக் கொடியில்
மூவர்ணங்களுக்கு நடுவில்
கம்பீரமாக வீற்றிற்கும் "சக்கரம்"
"அசோக சக்கரம்" என்ற பெயருடன்
தர்ம சிந்தனையின் நினைவாக
அசோகர் புகழ் பாடி சுழல்கிறது
இந்திய சுதந்திர திருநாளில்
சுதந்திர கொடியை வணங்கி
பாரெங்கும் பட்டொளி வீசி
பறந்திட சபதம் கொள்வோம்
வந்தே மாதரம் என்போம்
பாரத தேசத்தை காப்போம்....!!
--கோவை சுபா