சுதந்திரம் என்றால்

சுதந்திரம் என்றால்
சிறகுகளை விரித்து
வானில் பறக்கும் பறவைகள் !
சுதந்திரம் என்றல்
வானில் கொடியைப் பறக்கவிட்டு
தரையிலிருந்து வணக்கம் செலுத்துகிறோம் நாம் !
பருந்திலிருந்து சிட்டுக்குருவிவரை
ஆச்சரியப் படுகின்றன
தரையில் நிற்பதா சுதந்திரம் ! ?

ஆச்சரியப் படவேண்டாம் பறவைகளே
தரையில் நின்றாலும்
கற்பனை வானில் பறக்கிறேன்
என்றான் கவிஞன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-23, 10:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே