சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 29

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 29
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆடி : 29
°°°°°°°°°°°
புற்றுமண் பிரசாதம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதியானக் கோமதியம்பிகைச் சன்னதின்
பிராகார வாயு மூலையில்

சுனை நீர்ப் போல்
சுயமாக வளரும் புற்றுமண்
சந்தனம் மனந்திடும்
சந்தனம் கலக்காமல்
இயற்கையாகக் கலந்திட்ட
இறையருள் பெற்ற மண்
மற்ற மண் போலின்றி
மருந்தாகும் அற்புத மண்
மலைப் போல் குவிந்திருக்கும்
மருத்துவக் குணம் நிறைந்திருக்கும்

தீராத நோயுடன் கோமதியம்பிகையை
தேடிவரும் பக்தர்களுக்கு
திருவருளால் மருந்தாகும்
திடத்தன்மை வாய்ந்த
திலகமிடும் சந்தனம் போல்
தனிச் சிறப்பானப் புற்றுமண்ணை
தலத்தின் பிரசாதமாக
தவறாது உட்கொள்ள
தீராதப் பிணிகளையும்
தீர்த்திடும் அருமருந்து

தோல் நோய்களைத் தோலூரிக்கும்
விஷக் கடிகளை விஷமுறிக்கும்
புற்றுமண்ணை நீரில் கரைத்து
நெற்றியில் சந்தனமாக இட்டு
குங்குமத் திலகமிட்டால்
கேடுகள் கரைந்தோடும்
நிம்மதிப் பெருக்கெடுக்கும்

நெற்கட்டும்செவலைத் தலைநகராகக் கொண்டு
நல்லாட்சிப் புரிந்த மாமன்னர்
முதலாம் சுதந்திரப் போராட்டத்திற்கு
முதலில் குரல் கொடுத்த
மாவீரர் பூலித்தேவன்
மருந்தால் தீராத
கடும் வயிற்று வலியின்
கொடுமைத் தாங்காது
சங்கரன்கோவில் வந்த மன்னன்
சங்கரலிங்கரையும் கோமதியம்பிகையும்
சங்கரிநாராயணரையும் வணங்கி
புற்றுமண் பிரசாதம் உண்டு
பிணியான வயிற்றுவலிக் குணமாக
திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது

பிணிகள்யாவும்
பனிபோல் மறைய
கோமதியை வேண்டி
கேடுகள் தீர்க்கும்
அருமருந்துப் புற்றுமண்ணை
அருள் பிரசாதமாக உண்டு
நோயற்று வாழ்வோம் வாருங்கள்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Aug-23, 5:34 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 19

மேலே