அமானுஷ்ய இரவுகள்
பாத்திரங்கள் ஏன் அர்த்த ராத்திரியில்
ஜலதரங்கம் வாசிக்கிறேது ?
கிரஹாம் பெல்லின் பேசு கருவி
வளர்ச்சியில் செல்லாகி
இன்று சார்ஜ் தீர்ந்தும்
நடுநிசியில் அலாரம் அடித்துத் ஏன்
துயிலெழுப்புகிறது ?
அதென்ன காலடிச் சத்தம்
அதில் கொலுசொலி !
வியர்த்து விழித்தெழுந்தான்
தனி அறையில்
வெறும் கனவு .....
நிஜத்தில் நடு நிசியில்
ஏன் மேஜை விளக்கு
எரிந்து கொண்டிருக்கிறது ?
அணைக்க மறந்து விட்டானா ?
இல்லை ...பின்
நேற்று படித்த
அமானுஷ்ய இரவுகள்
சிவப்பு அட்டைப் புத்தகம்
விளக்குச் சுவிட்சில்
விழுந்ததில் விளக்கு
ஆன் ஆகியிருக்கலாம்
---நன்றி ஸ்பரிசனின் மினர்வா