பங்கெடுக்க வா
*******************
பங்கெடுக்க வா!
பங்கெடுக்க வா!
*******************
பங்கெடுக்க வா!*******************வாடிக்கை யாக வருபவளே! வஞ்சியே!வாடிக்'கை யேந்தும் வசதியிலார் - தாடியொடு ஏங்கிக் கிடப்பதுபோல் ஏந்திழை யுன்னன்பிற் கேங்கிக் கிடக்குமனக் கூடு.*கூடும் மணநாளைக் கொண்டாட வென்றிதயக் கூடும் அலைபாய்ந்து கொல்லுதடி - ஊடுறுவி அம்புவிடும் காதலில் அன்புசெய நீயன்றோநம்பிவந் தென்னிதயம் நாடு. *நாடு குறிப்பிடும் நல்வயது கொண்டவளே!நாடுமென் னுள்ளம் நரகத்தே! - வீடு இருள்நீங்க வேண்டி இதயத்தே நீதான் திருவிளக் கேற்றியெனைத் தீட்டு*தீட்டுப் படுமென்றே தீண்டாமல் போகாதே தீட்டுன் விழியாலே தேவதையே! - மாட்டும் திருக்கயிறு மானுன் திருக்கழுத்தில் தங்கும் ஒருவரம் நான்தருவேன் ஒத்து *ஒத்தூதி வாழும் ஒருவாழ் வுனக்கென்னில் ஒத்துவரா தென்றே ஒதுங்காதே! - பத்துப் பொருத்தங்கள் பார்த்து பரிசமிட்டார் கூட வருத்தமுற்றார் ஒன்றாக வாழ்ந்து *வாழ்ந்து மடிவதற்குள் வாட்டும் துயரங்கள் சூழ்ந்து விடுமெவர்க்கும் சொல்வேனே! - வீழ்ந்தெழுவாய்பேரழகே யானாலும் பேரன்பு கொள்ளாமல் பேரழகே யாகா பிறப்பு *பிறப்புற்று விட்டால் பிறவிப் பயனாய்ப் பிற'ப்புறுமே நெஞ்சில் பிரியமே! - உறவிற் கினியவ ளேஒன்றின் ஊரார் புகழ்த்த இனி'யவளே என்பேன் இனி *இனிவருங் காலம் இதழ்களில் தேனாய்இனிப்பாயே என்னன்பே! இன்பலாவே! - தனிமைதலைமை யகத்தின் தலைவியென் றாகித் நிலைமை தனைமாற்று நீ *நீவரும் காலம் நிழல்தரும் மேகம் பூவனக் கோலம் புதுவசந்தம் - சீவனம் ஆரம்பித் தேநாம் அமுதுண்ணக் கைக்கோத்து ஆரம்'பித் தேமகிழ்வோம் அங்கு *அங்குல அங்குலமாய் அன்பளந்து அன்பளிக்க அங்குளத் தீயை அணைப்போமே - சங்கமிக்க மங்கல குங்கும மாங்கல்ய மேடையில் பங்கெடுத்து வெற்றிகொள வா!*(மடக்கணி பாபாஃது)மெய்யன் நடராஜ்
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
