மண்ணுள்

...................மண்ணுள்..................
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
மண்ணுள் விளையும் கிழங்கே-
நீயேன் ஒரு துளி மண்ணையும்
தன்னுள் நுழைய மறுக்கின்றாய்
தரணியில் நேர்மையை மதிக்கின்றாய்

கண்ணியமாக விளைவித்து
புண்ணியம் தேடும் போதிலும்
எண்ணிய பணத்தினை ஈட்டிட
திண்ணியாய் வாழும் மனிதனோ

எண்ணைகள் முழுக்க கலப்படம்
எப்படி நடக்குது அதிக்கலம்
தண்ணியில் எழுதிய தரநிலை
புண்ணியம் அங்கே என்னவிலை

மண்டுகள் நடத்தும் அரசாங்கம்
நண்டுகளாய் பணம் நோண்டும்அதிகாரி
எல்லா நோய்களும் அர்ப்பணம்
எமனே உனக்குயிர் சமர்ப்பணம்...

🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺

எழுதியவர் : க.செல்வராசு (6-Jan-21, 6:57 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : mannul
பார்வை : 101

மேலே