முகம் காட்டும் முத்திரை

முகம் காட்டும் முத்திரை

முகங்கள் மட்டுமே
முத்திரையாய் இருக்கின்றன

பொக்கை வாய் கிழவனாய்
பொங்கி வரும் சிரிப்புடன்

அனுபவத்தின் வரிகளாய்
முகம் முழுக்க கோடுகளாய்

உதடு விரித்த சிரிப்புடன்


எண்ணத்தில் காட்டும்
பிரதிபலிப்புக்கள்
கண்ணாடியாய் நமக்கு
தெரிகிறது

மனித மனங்களில்
அழகானது என்கிற
மதிப்பீடு
சதை திரட்சியோ
இடை சுருக்கலோ
நிறம் கூட
கணக்கிலேயே வருவதில்லை
முகம் காட்டும் முத்திரையே

ஒவ்வொரு நாளும்
பார்க்கும் முகங்கள்
நம்மை
வாழவும் தூண்டலாம்
நேர்மறையாகவும் தூண்டலாம்

ஹிரோசிமாவில் வெடித்த
அணுகுண்டின் புகையில்
சித்றி விழுந்த மனித
உடல்கள் நடுவே
ஓடி வந்த சிறுமியின்
முகம்

அன்று நடந்த
மத கலவரம் உயிர்
பிச்சை கேட்டு நின்ற
இளைஞைனின் முகம்

துக்கங்களை மனதிற்குள்
விழுங்கி விட்டாலும்
முகம் காட்டும் போலி
முத்திரையாகித்தான் விடுகிறது.

இயற்கையின் படைப்பில்
முகம் காட்டும்
மனிதனோ மிருகமோ
முத்திரைகளை மனதிற்குள்
பதிக்கத்தான் செய்கின்றன.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Jan-21, 9:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 152

மேலே