ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கட்டுவதற்கு 
கயிறுதான்
தங்க முகக்கவசத்திற்கும் !

வேறு எங்குமில்லை
சொர்க்கம்
பிறந்த ஊர் தவிர !  

அக்கரைப் பச்சையென
சென்றவர்கள் திரும்புகின்றனர்
இக்கரை !

புரட்டிப்போட்டது
புதிய பொருளாதாரத்தை
கொடிய கொரோனா !

சொல்லவில்லை
எந்த சோதிடரும்
கொரோனா வருகை !

விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களையும்
கொரோனா !

மழைக்கு
ஒதுங்கமுடியாத குடை
காளான் ! 

வல்லரசு தொடங்கி
சிறிய நாடுகள் வரை
ஆடியது கொரோனா !

வரியைக் கூட்டி
வாங்கிக் கட்டினர்
கிருமி நாசினிக்கு !

காத்திருக்கிறார்கள்
கடை திறக்குமுன்
குடிமகன்கள் !

மூடும் நேரத்திலும்
முண்டி அடிக்கிறான்
குடிமகன் !

குடி உயர
வருமானம் உயரும்
மதுக்கடை !

நேரமில்லை என்றவர்கள்
நேரம் போகவில்லை என்றார்கள்
ஊரடங்கில்   !

கட்டாய ஒய்வு
வழங்கியது பலருக்கு
கொரோனா !

பயத்தை வென்றவர்கள்
வெல்கிறார்கள்
கொரோனாவை !

பாசிடிவ் என்றாலே
பயம் தொற்றிவிடுகிறது
பலருக்கு ! 

நெகட்டிவ்  என்றாலே
நெஞ்சில் இன்பம்
பிறக்கின்றது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (17-Jul-20, 6:58 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 213

மேலே