குடும்பத்துடன் களித்திருப்போம் கவிஞர் இரா இரவி

குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !

கொடிய கொரோனா தந்துள்ள அறிய வாய்ப்பு
குடும்பத்துடன் கழித்திருப்போம் களித்திருப்போம் !

இயந்திரமயமான உலகில் இயந்திரமாக இருந்தோம்
இனியாவது அன்பு செலுத்தி மனிதம் பேணுவோம் !

நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருந்தோம்
நின்று நிதானித்து மழலைகள் மகிழ்விப்போம் !

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடினோம்
கனிவாக இல்லத்தில் அமர்ந்து பேசுவோம் !

பரபரப்பாக என்றும் இயங்கி வந்தோம்
பண்பாக அமர்ந்து பாசம் பொழிவோம் !

பம்பரமாக நாளும் சுழன்று வந்தோம்
பாதிப்பு வராமலிருக்க இல்லத்தில் இருப்போம் !

அடுத்து வீட்டுக்காரரை அறியாமல் இருந்தோம்
அடுத்த வீட்டாரை கொஞ்சம் அறிந்து கொள்வோம் !

வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்போம்
வளமாக நலமாக வாழ வழிகள் காண்போம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (2-Apr-20, 7:49 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 106

மேலே