ரோசமா ரேசனா

ரோசமா ரேசனா

ரேசனா ரோசமா எதுதேவை எனக்கு l
ரோசமிலா எனக்கு பாசமும் இல்லை
ரோசமா முக்கியம் ரேசன்தான் வேணும்
ரேசன் இருக்க எனக்கேன் வெலைவெட்டி
ரேசனில் மலிவு விலைபொருள் தருவார்
ரேசன் பொருளை விற்பேன் குடிப்பேன்
ரேசனட்டை அடகு வைப்பேன் குடிப்பேன்
ரேசனில் தரமாட்டார் மதுபுட்டி
ரோசம் கெட்டவர் யார்நான் மட்டுமே

ரோசமிலா பிச்சை எடுத்தும் குடிப்பேன்
ரேசனில் குடிக்கபணம் தருவார் பொங்கலன்று
மோசமான புடவை யுண்டு வேட்டி யுண்டு
பாசமுள்ள மனைவி யிடுப்பில் பணமுடிச்சி
மோசமாய் பிடுங்கியதை ரோசமிலாக் குடிப்பேன்
வேசையர் எனக்குண்டு குடிக்கபணம் தருவாள்
தாசிபணத் திலேத்துவேன் ஓசி போதை
நாறிப் போவார் பிள்ளைகள் எனக்கென்ன?
ரேசனில் கொரானா பணங்கொடுக்க அழைக்கிறார்
ரேசன் போவனும் வழிவிடுங்க.
ரோசமென்ன ரோசமானங் கெட்ட ரோசமே

எழுதியவர் : பழனிராஜன் (2-Apr-20, 8:02 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே