இன்னும் மீதமிருக்கிறோம்

செயலற்று இயங்குகிறேன்
பாதாளத்தின் ஆழத்தில்
சில கணம்
வானத்து விண்மீன்களில்
சிலகணம்
இதம் தரும் தென்றலோடு
சில கணம்
இம்சிக்கும் சித்திரையின்
வெம்மையோடு சில கணம்...
என் எண்ணங்கள் எதிர்
தாக்குதல் இன்றியே
சமாதானக் கொடியை
நீட்டி நிற்கிறது
சமாதானமின்மைக்கு....
எனக்குள் நானே எதிரியாய்
பிடிப்பு குறையாமலிருக்க,
பிடித்ததைப்
புரட்டிப் போட எண்ணப்படுகிறேன்
புலப்படவில்லை
முடிவற்றுப்போனதா? - என்
ஆரம்பமே முடிவாய் திருத்தமற்று.
என் திருத்தமோ, குழப்பமுற்று.
மரணித்தது
வீழ்ந்தோம் நானும்
என் எழுதுகோலும் இனி
மீண்டெழ எண்ணமில்லை
இருவருக்கும்.
நாங்கள் இன்னும் மீதமிருக்கிறோம்....

எழுதியவர் : ஆனந்தி.ரா (19-Mar-16, 4:18 pm)
பார்வை : 245

மேலே