இணை சக்தி
உரம் தரும் உழைப்புண்டு இளமைக்கு
அனுபவம் தரும் ஆற்றலுண்டு முதுமைக்கு
உற்சாகம் தரும் ஊக்கமுண்டு இளமைக்கு
அமைதி தரும் தனிமையுண்டு முதுமைக்கு
உள்ளம் தரும் துணிவுண்டு இளமைக்கு
அவகாசம் தரும் ஆலோசனையுண்டு முதுமைக்கு
உயர்பயிற்சி தரும் சாதனையுண்டு இளமைக்கு
அடக்கம் தரும் அறமுண்டு முதுமைக்கு
உறுதுணை தரும் உவப்புண்டு இளமைக்கு
அயர்வு தரும் ஓய்வுண்டு முதுமைக்கு
இளமையே இயங்கு, இயற்று!
முதுமையே முனைவோர்க்கு உதவு!