ஆனந்தம் பேரானந்தம்
ஆனந்தம் பேரானந்தம்.
அளவோடு சாப்பிட்டால்,
கிடைப்பது?
நோயற்ற வாழ்வு.
அளவோடு பணம் இருந்தால்!
கிடைப்பது?
அமைதி.
வயதோடு அறிவையும் வளர்த்து,
அறிவோடு அன்பையும் வளர்த்தால்!
கிடைப்பது?
நட்பு.
இவை மூன்றும்
வாழ்வில் இருந்தால்!
கிடைப்பது?
ஆனந்தம்,
இல்லை இல்லை
அதற்கு பெயர்
பேரானந்தம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.