துன்பம் தருவதே -- நேரிசை ஆசிரியப்பா

துன்பம் தருவதே
******
(நேரிசை ஆசிரியப்பா)

குடிகளோ போதைக் குழுவிடை ; நாடதின்
குடியர சுமிங்கு கொள்ளை வழியிடை ;
முடிவிலா இலவசம், உணவிடல்,
தொடரும் இவைகள் துன்பம் தருவதே!
******

(ஈரசைச் சீர்கள் நாற்சீரடி ஈற்றயலடி மட்டும்
முச்சீர் அடி தோறும் எதுகை ஒன்று மற்றும்
மூன்றாம் சீரில் மோனை முடிவெழுத்து
ஏகாரம்)

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Sep-23, 7:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 77

மேலே