விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
6215
தண்டமென் றொருபொருட் குரிய தக்கரைக்
கண்டவர் பொறுப்பரோ? உலகம் காவலர்
வண்டமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ?
விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர்! 18
- இராவணன் மந்திரப் படலம், யுத்த காண்டம்
கலிவிருத்தத்தில் மேலேயுள்ள வாய்பாட்டின்படி வருவதும் ஒன்று. இந்த வாய்பாட்டின்படி ஒவ்வோர் அடியிலும் ஈற்றுச்சீர் கூவிளமே!
மற்றபடி நாம் எழுதும் விருத்தத்தில் ஒவ்வொரு அடியிலும் சீரொழுங்கு அமைந்தாலும் சிறப்பு!
கலிவிருத்தம்
[வெண்டளையால் அமைந்தது]
கிள்ளையொடு பூவை அழுத, கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை அழுத, உருவறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என்சொல்ல?
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்! 96
- நகர் நீங்கு படலம், அயோத்தியா காண்டம், ராமாயணம்