ஓரெழு வீரர்-உயர்ந்தார் - வஞ்சிவிருத்தம்

வஞ்சிவிருத்தம்
(கூவிளம் தேமா புளிமா)
(ரெ உயிரெதுகை)

நீர்கெழு வேலை நிமிர்ந்தார்;
தார்கெழு தானை சமைந்தார்;-
போர்கெழு மாலை புனைந்தார்
ஓரெழு வீரர்-உயர்ந்தார்! 51

- இலங்கை எரியூட்டு படலம்,
சுந்தர காண்டம், கம்பராமாயணம்

பொருளுரை:

(அவ்வீரர்களுள்) உயர்ந்தவர்களாகிய ஒப்பற்ற ஏழு வீரர்கள் நீர்மிகும் கடல்போல எழுந்தவர்களாய், போர்க்குரிய தும்பை மாலை அணிந்து அணிவகுக்கப் பெற்ற சேனையை ஆயத்தம் செய்தார்கள்!.

எழுதியவர் : கம்பர் (14-Sep-23, 7:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே