பேசுமோ காதல் கொஞ்சம்

கயல்கள் அரங்கேறும் மன்றம் விழிகள்
விழிநீலத் தில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழிதழ்கள் இன்னொரு மன்றம்
இதயமோ காதல்மன் றம்

கவிதை அரங்கேறும் மன்றம் இருகண்கள்
கண்ணிரண் டில்வந் துறவாடும் வான்நீலம்
பேசும் தமிழினால் நீயே தமிழ்மன்றம்
பேசுமோ காதல்கொஞ் சம்

----ஒரு பா இருவடிவில்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-21, 11:00 am)
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே