தடுப்போர் இடுப்பை - கலித்துறை

கலித்துறை

படிப்பது பாவ மெனச்சொல் லிடும்மாந் தரையும்
அடிப்பதில் பாவமில் லைதான் உணர்வீர் எவரும்
படிப்பது யாவருக் கும்பொது பூமியின் சொத்து
தடுப்போர் இடுப்பை தவிடென செய்திடு வெற்றியே – (க)

மதஞ்செய் ததைப்புகுத் திட்ட அயலக நாட்டின்
கதையைப் படித்து நமது குலத்தை மறந்து
உதவா வகையில் பிரிவைத் தொடரும் பலரும்
மதகரி ஒப்பக் குணங்கொண் டவரே உணரு – (உ)

ஆதவன் காலும் அனலும் புவியும் நிலையிலே
மாதவம் செய்யும் மரமும் கொடியும் உறுதியாய்
பேதமே காட்டா உணவும் உறக்கம் பொதுப்படை
தோதிலா பிரிவை மதத்தால் புனைந்தவன் பொய்யே – (ங)

இதனால் அறிவு குறையும் எனவும் உரைக்கும்
பதப்படா மக்கள் குழுவை ஒதுக்கி நிறுத்தி
மதுவை விலக்கி அரசியல் நீங்கி உழைப்பில்
பொதுவாய் மனத்தினை வைத்தால் எதிலும் அரசனே – (ச)

மறையது மக்களை சீர்செய்ய மாறிடில் வேண்டாம்
கறைபடும் யாதுமே நீக்கியே நல்வழி செல்வோம்
உறையும் வராது உரைத்தவன் நீங்குவான் நன்றும்
மறையாய் நிலைக்குமே நாட்டில் துயரிலை என்றுமே. – (ரு)
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Sep-23, 12:41 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 37

மேலே