நாளை நமதே

அவர் ஓர் கட்சியின் தலைவர்
இன்று , அவர்
நேற்று இருந்தது ஓர் கட்சி
நாளை எந்த கட்சி மாறுவார்
யாரறிவார்
இப்படி கட்சி மாறிக்கொண்டிருக்கும்
அவருக்கு அரசியலில் எந்த கொள்கை
இடமா....வலமா....நடுநிலையா
அவருக்கு தெரியாது
மக்கள் பின் அவரை என் தேர்ந்தெடுத்தார்
நேற்றைய மக்களுக்கு அது தெரியாது
இன்றைய மக்கள் கொஞ்சம் அரசியல்
அலச..... நேற்று நடந்த தேர்தலில் இந்த நபரை
ஒதுக்கிவிட....காணாது போனார் நபர்
நாளை உலகிற்கு நாம் தேடுவது
சுயநலமில்லா தேசியவாதி, அரசியல் ஞானி..
மக்கள் நினைக்க...

தேர்தல் வெற்றி அறிவிப்பு
ஒளி பெருக்கி அலறுகிறது ...
'நாளை நமதே, நாளை நமதே'
நல்லது தீயது உணர்ந்த மக்கள் ஆட்சி.
நாடு முன்னேற்றம் ....வேண்டாம் வீண் பேச்சு
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Sep-23, 2:31 am)
Tanglish : naalai namathe
பார்வை : 46

மேலே